அதிர்ச்சி…! திருப்புவனம் அஜித் போல் மற்றொரு சம்பவம்…! அண்ணாமலை எழுப்பும் சந்தேகம்…!

naveen 2025

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர நிகழ்வுக்கும், தற்போது, நவீன் இறப்புக்கும் பொதுவான சந்தேகம், திமுக அரசின் காவல்துறை மீதுதான் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி (37). திருமணமாகி குடும்பத்துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகர், முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சென்னை மாதவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்னியம்மன்மேட்டில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், அண்மையில் திருமலா பால் நிறுவனம் அவர்களது நிறுவன வரவு – செலவு கணக்குகளை சரிபார்த்து தணிக்கை செய்துள்ளது. அப்போது, ரூ.40 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. நவீன் அந்த பணத்தை கையாடல் செய்ததாகவும், அந்த பணத்தை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பரின் வங்கி கணக்குக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் கடந்த மாதம் 25-ம் தேதி கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் நவீனை நேரில் வரும்படி கூறி போனில் அழைத்து விசாரித்ததாகவும், அப்போது, ‘பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என போலீஸாரிடம் நவீன் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர மேலும் சிலர் நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு அவர் வீட்டருகே உள்ள குடிசையில் தூக்கில் தொங்கிய நிலையில் நவீன் சடமாகக் கிடந்தார். தகவல் அறிந்து வந்த புழல் போலீஸார், உடலை மீட்டு பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து நவீன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி..

சென்னையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உடல் கண்டெடுக்கப்பட்ட திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளர் நவீன் குறித்து, தமிழகக் காவல்துறை ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. நவீன் அவர்கள் உடல், கைகள் பின்பக்கம் கட்டப்பட்ட நிலையில், நைலான் கயிற்றில் தொங்கவிடப்பட்டு இருந்திருக்கிறது. உடல் கிடைத்த அறையில், எந்த நாற்காலிகளும் இல்லை. முழுக்க முழுக்க சந்தேகமான முறையில் கிடைத்த உடலை வைத்து, தற்கொலை என்ற உறுதியான முடிவுக்கு எப்படி வந்தது திமுக அரசின் காவல்துறை?

பணம் கையாடல் செய்ததாகக் கூறப்படும் புகார் வந்து இரண்டு வாரங்கள் கடந்தும், காவல்துறை விசாரணை செய்யவில்லை என்றும், நவீன் அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சலில், காவல்துறை குறித்து எந்தக் குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை என்று காவல்துறை செய்திக் குறிப்பு பெருமையுடன் தெரிவிக்கிறது. இரண்டு வாரங்களாக விசாரணை நடத்தவில்லை என்பதில் காவல்துறைக்கு அசிங்கமில்லையா?

சுமார் ரூ.40 கோடிக்கும் அதிகமான பணம் கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் புகாரில், இரண்டு வாரங்களாகக் காவல்துறை எந்த விசாரணையும் செய்யாமல் இருந்திருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. நவீன் அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சல் நவீன் அவர்களது கைபேசியிலிருந்து அனுப்பப்பட்டதா அல்லது அவரது கணினியிலிருந்து அனுப்பப்பட்டதா? அந்த மின்னஞ்சலில், திருமலா பால் நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் நவீனை மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறை முன்பே விசாரித்திருந்தால், இதனை நவீன் நேரடியாகக் காவல்துறையிடம் தெரிவித்திருக்க மாட்டாரா?

நவீனை, தனியாக விசாரணை செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் பாண்டியராஜன், அவசர அவசரமாக விடுப்பில் சென்றது ஏன் என்ற கேள்விக்கு, இன்னும் பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கில், துணை ஆணையாளர் பாண்டியராஜன் அவர்கள் தொடர்பு குறித்து, சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையாளர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளிலா, இரண்டு நாளிலா அல்லது ஒரு வாரத்திலா? எத்தனை நாட்களில் இந்த அறிக்கை வெளியிடப்படும் என்பது குறித்து ஏன் எந்தத் தகவலும் இல்லை?

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர நிகழ்வுக்கும், தற்போது, நவீன் இறப்புக்கும் பொதுவான சந்தேகம், திமுக அரசின் காவல்துறை மீதுதான். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Read More: Tn Govt: படித்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வரை உதவித்தொகை…!

Vignesh

Next Post

அடுத்த 5 மாதங்களில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்!. உங்க ராசி இருக்கா?. பாபா வங்கா கணிப்பு!

Sat Jul 12 , 2025
இந்த வருடத்தின் மீதமுள்ள மாதங்களில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். பிரபஞ்சம் மர்மங்களால் நிறைந்துள்ளது, மேலும் சில தனிநபர்கள் நிகழ்வுகள் வெளிப்படுவதற்கு முன்பே அவற்றை முன்னறிவிக்கும் திறனுடன் தனித்துவமான பரிசைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. தீர்க்கதரிசன உலகில் மிகவும் பிரபலமான பெயர்களில் நோஸ்ட்ராடாமஸ், ரியோ டாட்சுகி மற்றும் புகழ்பெற்ற பல்கேரிய ஞானி பாபா வாங்கா ஆகியோர் அடங்குவர் . அவர்களின் அசாதாரண துல்லியத்திற்கு பெயர் பெற்ற அவர்களின் கணிப்புகள் பெரும்பாலும் […]
baba vangas stunning 2025 forecast these 5 zodiac signs will soar to success 1

You May Like