திமுகவுக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு..!! ஸ்டாலினை சந்தித்து கடிதம்..!! சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்..!!

Stalin 2026

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.


மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பதிவான வாக்குகள் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில் ஆளும் தவெக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் தனித்தனியே களமிறங்குவதால் பலப்பரீட்சை 5 முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது.

இச்சூழலில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் அல்ஹாஜ் எம். பஷீர் அஹமது தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். அப்போது, இரண்டு தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறி அதற்கான ஆதரவு கடிதத்தை ஸ்டாலினிடம் முறைப்படி வழங்கினர். முன்னதாக, இரண்டு தினங்களுக்கு முன்பு புதிய புரட்சி கழகம் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்திய தேசிய லீக்கும் ஆதரவு கரம் நீட்டியுள்ளது.

அதேவேளையில், ஆளும் தவெக தலைமையிலான கூட்டணிக்குத் தனது முழு ஆதரவை வழங்குவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்திருந்த நிலையில், தற்போது திமுக கூட்டணிக்கான ஆதரவும் அதிகரித்திருப்பது இடைத்தேர்தல் களத்தின் அரசியல் சூட்டை மேலும் எகிற வைத்துள்ளது.

Read More : ஜெம் வீரமணி பாலியல் வழக்கு..!! எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும் சும்மா விடக் கூடாது..!! எடப்பாடி பழனிசாமி காட்டம்..!!

Next Post

பெண்கள் மட்டும்தான் House Wifeஆ இருக்கணுமா? ஆண்கள் House Husbandஆ இருக்கக் கூடாதா? விவாகரத்து வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!

Thu Sep 24 , 2026
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் தம்பதியினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் விவாகரத்து கோரியும், மனைவி திருமண உரிமைகளை மீட்டெடுத்துத் தரக் கோரியும் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தனர். இந்த வழக்கின் விசாரணையின்போது, கடந்த அரை நூற்றாண்டில் பெண்கள் அதிகளவில் கல்வி பயின்று, பல்வேறு […]
House Husband 2026

You May Like