தமிழகத்தில் மற்றொரு சோகம்.. 9 பேர் மரணம்…! பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்…!

PM Modi 2025 2

எண்ணூர் அனல் மின நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.


திருவள்ளூர் மாவட்டம், வாயலூரில் 2×660 MW மெகா வாட் திறனுடைய எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்டுமானப் பணிகள் சமீப காலமாக நடைபெற்று வருகிறது. பாரதமிகு நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் இந்தக் கட்டுமான பணியில் 3,000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமான பணியில் தற்போது, சுமார் 70 சதவீத பணிகள் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் நிலைய கட்டுமான பணியில், அனல் மின் நிலைய முகப்பு பகுதி அமைக்கும் பணியில் இன்று மாலை சுமார் 30-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, திடீரென இரும்பு கம்பிகளால் ஆன முகப்பு பகுதியில் உள்ள சாரம் சரிந்து விழுந்தது. இதில், 9 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டின் சென்னையில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிருந்து தலா. ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இன்றுமுதல் எல்லாம் மாறிடுச்சு!. ஆதார் கட்டணம், UPI முதல் ஆன்லைன் கேமிங் வரை!. என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?

Wed Oct 1 , 2025
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) விதித்த யுபிஐ விதிகள் அமலுக்கு வருகின்றன. ரூ.2,000 வரையில் பணத்தை கேட்டு கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), போன்பே (PhonePe), பீம் (BHIM) போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு இந்த விதிகள் நேரடியாக அமலுக்கு வருகின்றன. யுபிஐ கலெக்ட் […]
october rules

You May Like