சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 11வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு முதல் அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு அளித்துள்ளது.
அதேபோல் போராட்டக்காரர்களுடன் களத்தில் இறங்கிய நடிகை சனம் ஷெட்டி, அரசு மற்றும் அமைச்சர்கள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், அரசாங்கத்திற்கு அசிங்கமாக இருக்க வேண்டும். பத்து நாட்களாக போராடுகிறார்கள். என்ன பிரச்சனை என்று கூட கேட்காமல் அப்படியே விட்டுட்டாங்க. கொரோனா காலகட்டத்தில் தங்கள் உயிர் மற்றும் குடும்பத்தை கூட பார்க்காமல் எங்களுக்காக வந்து நின்றார்கள்.
தெரு தெருவாக வந்து சுத்தம் செய்தவர்கள் என் நண்பர்கள். இவர்களுக்காக குரல் கொடுப்பது என்னுடைய கடமை. எனக்கே இருக்கும்போது இந்த அரசாங்கத்திற்கு ஏன் இல்லை? உங்களை ஓட்டுப்போட்டு தேர்வு செய்தார்கள். ஆனால் அதை கண்டுக்காமல் இன்னும் எத்தனை நாட்கள் தான் இவர்களை வைத்திருப்பீர்கள். சென்னை மேயர் பிரியா வராங்க செய்தி வாசிப்பாளர் மாதிரி பேசிட்டு போறாங்க. ஆனா தீர்வு கிடைக்கல. நீங்கள் கொடுத்த வாக்குறுதியை தான் கேட்கிறார்கள்.
அதையே நீங்கள் செய்ய வில்லை, உங்கள் நேரம் முடிய போகுது, இனிமே எப்படி ஓட்டு கேட்டு வருவீங்க என்று தெரியல. மக்களுக்காக ஒரு பாலிசி மாற்ற முடியவில்லை என்றால் நீங்கள் இருந்தால் என்ன இல்லாட்டி என்ன. மக்கள் தேவை தான் முக்கியம். அதை விட்டுவிட்டு சிலையெல்லாம் உங்களை யார் கேட்டது. அமைச்சர் நேரு நீங்கள் உயிருடன் தான் இருக்கீங்களா. தயவுசெய்து இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் ப்ளீஸ் என்று பேசியுள்ளார்.
Read more: செக்..! மேலும் 476 அரசியல் கட்சிகளை நீக்கும் நடவடிக்கையில் இறங்கிய தேர்தல் ஆணையம்…!