சட்டமன்றத் தேர்தல் 2026: கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாமில் ஆட்சியை பிடிப்பது யார்..? விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

vote

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களுக்கான தேர்தல் இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இதன் தொடர்ச்சியாக, இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. கேரளாவில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ், புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ்- என்டிஏ மற்றும் காங்கிரஸ்- திமுக, அசாமில் பாஜக- காங்கிரஸ் இடையே பிரதான போட்டி இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும். இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 4ம் தேதி தமிழ்நாடு, மேற்கு வங்க தேர்தல் முடிவுகளோடு எண்ணப்படும்.

கேரளா: கேரளாவின் 14 மாவட்டங்களில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 2.71 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

ஆண் வாக்காளர்கள் – 1.32 கோடி
பெண் வாக்காளர்கள் – 1.39 கோடி
மூன்றாம் பாலினத்தவர்கள் – 273

புதுச்சேரி: 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 9.50 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

பெண் வாக்காளர்கள் – 5,03,810
ஆண் வாக்காளர்கள் – 4,46,361
மூன்றாம் பாலினத்தவர் – 140

அசாம்: 126 தொகுதிகள் கொண்ட அசாமில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 2.49 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும், இந்த தேர்தலில் 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஆண் வாக்காளர்கள் – 1,24,82,213
பெண் வாக்காளர்கள் – 1,24,75,583
மூன்றாம் பாலினத்தவர் – 343

Read more: தரைமட்டத்திற்கு சரிந்த சின்ன வெங்காயம் விலை.. விரக்தியில் விவசாயிகள்..! ஒரு கிலோ இவ்வளவு தானா?

English Summary

Assembly Elections 2026: Voting begins in Kerala, Puducherry, Assam..!

Next Post

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது.. இலங்கை கடற்படையின் அட்டூழியம்..! எல்லை தாண்டியதாக குற்றச்சாட்டு!

Thu Apr 9 , 2026
10 Rameswaram fishermen arrested.. Sri Lankan Navy atrocities..!
6136430 df 1

You May Like