2022-23ஆம் ஆண்டிற்கான 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் காலை 10 மணிக்குத்தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடைகிறது. மாணவர்கள் வினாத்தாளை படிப்பதற்கு 10 நிமிடங்கள், விடைத்தாளில் உள்ள தகவல்களை சரிபார்த்து பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து தேர்வுகள் காலை 10.15 மணிக்குத் தொடங்கி மதியம் 1.15 மணி வரையில் […]
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய 2 விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்; தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 5.11.2022 அன்று கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும், அவர்களது இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 937 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 09 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,047 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் […]
மத்திய அரசின் திட்டங்கள் பயனாளிகளை சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்க ஒரு குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளது என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்த அவர், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், மத்திய […]
முஸ்லீம் தனிநபர் சட்டம் தொடர்பான சட்டப் பிரச்சினையில் எந்தப் பயிற்சியும் அல்லது சட்ட அறிவியலும் இல்லாத மதகுருமார்களை நீதிமன்றங்கள் நம்பி முடிவெடுக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இஸ்லாமிய பெண்கள், குலா சட்டம் மூலம் விவாகரத்து பெற அனுமதி வழங்கக்கோரி, கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தனர். அதில், நீதித்துறை அமைப்புகள் மூலம் விவாகரத்து பெறுவது இஸ்லாமியப் […]
டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் விலையை உயர்த்தியதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் சந்தைகளில் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. மாறுபாடு மற்றும் மாடலைப் பொறுத்து இந்த விலை உயர்வானது 0.9% ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. வாகனங்களை தயாரிப்பதற்கான உதவிப் பொருட்களின் செலவினங்கள் அதிகரித்துள்ளது, ஆனால் ஒட்டுமொத்த உள்ளீட்டுச் செலவுகளின் நிலையான உயர்வு, இந்த குறைந்தபட்ச விலை உயர்வு கொண்டு வரும் சூழல் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் நாடு […]
நாடு முழுவதும் நாளை 11 மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குருநானக் ஜெயந்தி, குர்புரப் என்றும் அழைக்கப்படுகிறது, இது சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிக முக்கியமான பண்டிகையாகும். முதல் சீக்கிய குருவான குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி கார்த்திகை மாதத்தில் பதினைந்தாவது சந்திர நாளான கார்த்திக் பூர்ணிமா நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது, மேலும் பொதுவாக கிரிகோரியன் நாட்காட்டியின்படி நாளை இது […]
இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்குத்திசையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். குமரிக்கடல் […]
சரோஜா பாலசுப்ரமணியன் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரான காலம் சென்ற எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மனைவியும், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் அவர்களின் தாயாருமான சரோஜா பாலசுப்ரமணியன் காலமானார். இவருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது இரங்கல் செய்தியில்; விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் திரு.சீனிவாசன் அவர்களின் […]