மாவட்ட வாரியாக எஸ்பிக்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் கீழ் அமைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை உடனே கலைக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் […]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி இணைய தளத்திற்குச் (tnpsc.gov.in) சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பிரிவில் 3935 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்காக, கடந்த ஏப்ரல் 25-ம் தேதி முதல் […]

மின்சார பேருந்துகளில் டீலக்ஸ் கட்டணமே வசூலிக்கப்படும். இதர பேருந்துகளைப் போல சிங்காரச் சென்னை பயண அட்டை, ரூ.1000 பயண அட்டை, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். பேருந்துகளை மின்னேற்றம் […]

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும். தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 விதி 289(1) ன்படி நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும். நகர்புறங்களில் 500 சதுர அடி வரை உள்ள கடைகளுக்கு சுய சான்று அடிப்படையில் ஒரே நாளில் தொழில் உரிமம் வழங்க இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. […]

மத்திய பணியாளர் தேர்வாணையம் பன்முகத் திறன் (தொழில்நுட்பம் அல்லாத) பணி மற்றும் ஹவில்தார் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பன்முகத் திறன் (தொழில்நுட்பம் அல்லாத) பணியாளர் மற்றும் ஹவில்தார் பணிக்கான தேர்வு 2025 குறித்து மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்களில் பன்முகத்திறன் பணியாளராக […]

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய ஜுலை 18-ம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இவ்வறிவிப்பிற்கிணங்க 2022ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நாள் விழா […]

லாக்கப் மரணங்கள் ஆளும் கட்சியால் நடக்கிறது எனச் சொல்ல முடியாது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், குடியரசுத் தலைவர் ஆட்சியே இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தான் நடக்கிறது என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட […]

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டில் காரீப் (சொர்ணவாரி) பருவத்தில் நெல் I, 380 கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நெல் I பயிருக்கான விதைப்புக்காலம் மே முதல் ஜூன் ஆகும். ஆகையால் நெல் I (சொர்ணவாரி) பயிரிடும் விவசாயிகள் அனைவரும் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு ரூ.726/- பிரீமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் என மாவட்ட […]

ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்திட உதவ வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் பெண்ணின் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை உள்ளிட்டோர், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நேற்று புகார் மனு அளித்தனர். அந்த மனு குறித்து இறந்த பெண்ணின் தந்தை அண்ணாதுரை கூறியதாவது; திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி […]

முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் பேசியதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில், மதுரையில் கடந்த 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. அம்மாநாட்டில் அரசியல், மதம், பொது அமைதிக்கு எதிராகப் பேசக்கூடாது என்பன உள்ளிட்ட 52 நிபந்தனைகளை, மாநகர காவல் துறை விதித்திருந்தது. […]