ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் நந்தியாவட்டை செடியின் இலை, மலர். வேர்பட்டையில் உள்ள மருத்துவ பயன்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். நந்தியாவட்டை பூக்கள் மற்றும் இலையிலிருந்து வரும் பால் இரண்டுமே மருத்துவ பயன் நிறைந்தவை.இதனுடைய வேர் கசப்பு மற்றும் துவர்ப்புச்சுவையும் கொண்டிருக்கும். உடலில் இருக்கும் சூட்டை கிளப்பி பிறகு சீராக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் நந்தியாவட்டை பயன்படுத்தப்படுகிறது.அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள் போன்ற வேதிபொருள்களும் சிட்ரிக், ஒலியிக் அமிலங்களும் உள்ள இந்த நந்தியாவட்டை […]
தினந்தோறும் இரவு முழுக்க பாலில் ஊறவைத்த முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மிகுந்த சுவை மிக்க முந்திரி பருப்பை அனைவரும் விரும்பி உண்பார்கள். இதில் ஆன்டிஆக்ஸிடன்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் காணப்படுகிறது. இந்தநிலையில், முந்திரி பருப்பை பல வழிகளில் எடுத்து கொள்ளலாம். சிலர் தேனில் ஊறவைத்து உண்பார்கள். சிலர் முந்திரியை பச்சையாக சாப்பிடுவார்கள். […]
தமிழ்நாடு அரசு மற்றும் ரெனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாடு இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு […]
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் அதிகபட்சமாக கடந்த 5 ஆண்டுகளில் 80 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் நடந்த லாக்கப் மரணங்கள் குறித்த புள்ளி விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2017 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2022 மார்ச் 31ம் தேதி வரை 5 ஆண்டுகளில் நாட்டிலேயே அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 80 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் 4 நகரங்கள் அதிகளவில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தியாவின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் குறித்தும் மாசடைவதை தடுக்கும் வகையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நெறிமுறைகளை வகுத்துள்ளதா என்று உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சுழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணை அமைச்சர் பூபேந்திர யாதவ், நாடு முழுவதும் 131 நகரங்கள் மாசுபாட்டால் […]
30 வயது ஆண்கள் முதுகு தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில உடற்பயிற்சிகளை செய்வதைத் தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்த உதவும் உடற் பயிற்சி ஒரு நபரின் உடல்நலத்தைப் பாதுகாப்பதுடன் நோயாளியின் உடல்நிலையை சீராக்குகிறது. இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற குறைகளை உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த இயலும். மேலும் மன வளத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, தன்னம்பிக்கையை ஊட்டி, உடல் தோற்றத்தை […]
ரூ.346.6 கோடி நஷ்டம் அடைந்துள்ளதால் 225 சிறிய நகரங்களில் தனது சேவைகளை நிறுத்தப் போவதாக பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Zomato அறிவித்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி தொழில்நுட்ப நிறுவனமான Zomato,மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்த நிறுவனம் அதன் லாபத்தை அதிகரிக்க சமீபத்தில் தங்க சந்தாவை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், 225 சிறிய நகரங்களில் தனது சேவைகளை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த டிசம்பரில் முடிவடைந்த […]
சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் எங்கிருந்தும், எந்நேரத்திலும் பட்டா மாற்றம் செய்து கொள்ள இணையம் வாயிலாக விண்ணப்பிக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது மக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே எங்கிருந்தும், எந்நேரத்திலும் tamilnilam.tn.gov.in/citizen என்றஇணையதள முகவரியை உள்ளீடு செய்து இணையம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், நில உட்பிரிவுக்கான கட்டணம், செயலாக்க கட்டணங்களை இணைய வழியிலேயே […]
நாம் தூக்கி எறியும் பூசணி விதைகளை தினமும் இரவில் சாப்பிட்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை போக்கி, ஆழ்ந்த உறக்கத்தையும் அளிக்கிறது. மேலும் இதிலுள்ள நன்மைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும்.மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் சரியாக இயங்குவதற்குத் தேவையானஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது. உடல் தனக்குக் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளவும் கதகதப்புடன் வைத்துக் கொள்ளவும் இது […]
சுற்றுச்சுழலை காக்கும் புதிய முயற்சியாக பெல்ஜியத்தில் உள்ள உணவகத்தில், கழிவுநீரை மறுசுழற்சி செய்து குடிநீர் மற்றும் தேநீர் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. நிலத்தடி நீரை மாசுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவை வீட்டு உபயோக மற்றும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆகியவையாகும். இந்த கழிவு நீர் விவசாய நிலங்களை அசுத்தப்படுத்துவதோடு, சுற்றுச்சுழல் சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது. இந்தநிலையில் சுற்றுச்சுழலை காக்கும் நோக்கில் ஆங்காங்கே கழிவு நீரை மறுச்சுழற்சி செய்து குடிநீராக பயன்படுத்தபட்டு […]