பிரபல திரைப்பட நடிகர் விக்ரம் வளர்த்து வரும் லார் கிப்பான் வகை குரங்கு குறித்து உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் அவருக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நடிகர் விக்ரம், லார் கிப்பன் (Lar Gibbon) என்ற சிறிய வகை அரிய குரங்குடன் விளையாடும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. விக்ரமின் முடியைப் பிடித்து இழுத்தபடி அந்த அரிய வகை குரங்கு அவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் […]
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சொத்து வரி உயர்வு எதுவும் செய்யப்படவில்லை என்று அண்மையில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது திடீரென பல்லாயிரக்கணக்கான சொத்து உரிமையாளர்களுக்கு வரி மறுமதிப்பீடு குறித்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு வருவதால் பொதுமக்களும் சொத்து உரிமையாளர்களும் கடும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். முன்னதாக கணக்கிடப்பட்ட போது குறைவாக வரி மதிப்பிடப்பட்டிருந்த சுமார் 3.5 லட்சம் சொத்துக்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு மட்டுமே இந்த மறுமதிப்பீடு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் […]
காவேரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவைக் கண்டித்து, கன்னட அமைப்புகள் வியாழக்கிழமை இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த பந்த் போராட்ட அறிவிப்பு இருந்தாலும், கர்நாடகா முழுவதும் பள்ளிகள், வங்கிகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் பொதுப்போக்குவரத்து சேவைகள் வழக்கம்போலவே இயங்கி […]
லடாக்கின் லே பகுதியில் வியாழக்கிழமை அன்று ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த ஒன்றிய பிரதேசத்தில் நான்கு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, இந்த இரண்டாவது நிலநடுக்கம் காலை 9.54 மணியளவில் ஏற்பட்டது. இது வடக்கே 36.765 அட்சரேகையிலும், […]
உலகிலேயே காதலின் ஆகச்சிறந்த அடையாளமாக பார்க்கப்படும் தாஜ்மஹாலை மாதிரியாகக் கொண்டு, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மனைவிக்காக 4 படுக்கையறை வசதிகள் கொண்ட பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் பிரகாஷ் சௌக்சி என்பவரால் கட்டப்பட்ட இந்த வீட்டின் அழகையும், அதன் பின்னணியில் உள்ள காதலையும் விவரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அசல் தாஜ்மஹாலைப் போலவே […]
உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையான ‘ஹார்முஸ் நீரிணை’ அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், அதனைத் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கப் போவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் தடையை “இரும்புச் சுவர்” என்று குறிப்பிட்டுள்ளதோடு, இதற்கு எதிராக ஈரானால் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். ஈரானின் ராணுவ […]
அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி மறைந்ததைத் தொடர்ந்து கால்பந்து விளையாட்டு உலகிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து தீவிரமாக யோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தனது தந்தையின் இழப்பிற்குப் பிறகு விளையாட்டுக்கு சிறிது காலம் இடைவெளி விட்டுள்ள மெஸ்ஸி, தனது எதிர்காலம் குறித்தும் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தைக்கு அஞ்சலி செலுத்திப் பதிவிட்டுள்ள மெஸ்ஸி, “அப்பா, நீங்கள் எங்களை விட்டுப் […]
மன்னார் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் இதற்கு நிரந்தர தீர்வு கோரி கோரிக்கை வைத்து வந்தாலும் இந்த பிரச்சினை முடிந்தபாடில்லை. தமிழக முதல்வர் விஜய்யும் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து கடிதம் எழுதி […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-2 மற்றும் குரூப்-2A பதவிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள மொத்தம் 821 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் குரூப்-2 பிரிவில் 41 இடங்களும், குரூப்-2A பிரிவில் 780 இடங்களும் அடங்கும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். முதல்நிலைத் […]
பான் மசாலா பொட்டலங்களுக்கான விதிகளில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, பான் மசாலாவை பேக்கிங் செய்யப் பயன்படுத்தப்படும் பொருட்களில் பிளாஸ்டிக் சார்ந்த அல்லது பிளாஸ்டிக் லேமினேட் செய்யப்பட்ட உறைகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய ஃபாயில் கவர்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, FSSAI வெளியிட்ட செய்திக்குறிப்பில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் […]

