2025 ஆம் ஆண்டும் பருவமழை காலம் தொடங்கிவிட்டது. பருவமழை குளிர்ச்சியையும் நிம்மதியையும் அளித்தாலும், சாலைகளில் வாகனம் ஓட்டும் சவாலையும் உடன் கொண்டு வருகிறது. நீர் தேங்கிய சாலைகள், போக்குவரத்து நெரிசல்கள், திடீர் பள்ளங்கள் ஆகியவற்றைக் கடந்து பாதுகாப்பாகப் பயணிக்க, சில விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். நீர் தேங்கிய சாலைகளைத் தவிர்ப்பது அவசியம் : முன்னால் செல்லும் வாகனம் பாதுகாப்பாக கடந்துவிட்டது என்பதற்காக, அதே பாதையைப் பின்பற்றி நாமும் செல்லலாம் […]
சரும அழகைப் பராமரிப்பதில் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவது, சமீபகாலமாக பிரபலங்கள் மத்தியில் தொடங்கி பொதுமக்கள் வரை ட்ரெண்டாகி வருகிறது. ஒரு சிறிய ஐஸ் கட்டியைக் கொண்டு முகத்தில் மசாஜ் (Facial Massage) செய்வது, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத் துளைகளைச் சுருக்கி, வீக்கம் மற்றும் சிவந்த புள்ளிகளை குறைக்கிறது. இதனால் சருமம் மென்மையாகவும், இளமையாகவும் இருக்கும். இந்த எளிய முறை சருமப் பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவுவதால், இதை எத்தனை முறை […]
கண் கண்ணாடி அணிபவர்களுக்கு லென்ஸ்களில் கீறல் விழுவது தவிர்க்க முடியாத சவாலாகும். இந்த கீறல்கள் பார்வையின் தெளிவைக் குறைத்து, புதிய கண்ணாடிகளை வாங்கும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும். அதிக செலவில் புதிய லென்ஸ்களை மாற்றுவதற்கு முன், உங்கள் கண்ணாடி லென்ஸ்களில் உள்ள சிறிய கீறல்களைக் குறைக்க உதவும் சில எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். பல் துலக்கும் பேஸ்ட் : பல் துலக்கும் பேஸ்ட் இந்த சிக்கலுக்கான […]
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய இடங்கள் மட்டுமின்றி, பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களுக்குச் சமூக ஊடகங்கள் வழியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை ஒட்டியுள்ள செவ்வாபேட்டை, பருத்திப்பட்டு மற்றும் திருமழிசை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 3 பள்ளிகளுக்கு மர்ம நபர் […]
நைஜீரியாவின் மத்திய மாகாணமான நைஜர் மாநிலத்தில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்த சம்பவத்தில் 42 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 52 பேர் காயமடைந்துள்ளனர். பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி, சாலையின் மோசமான நிலை காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து, பிடா-அகை சாலையில் உள்ள எஸ்ஸான் மற்றும் படெகி கிராமங்களுக்கு அருகே கவிழ்ந்தது. அப்போது, டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல் சிந்தியதைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள், ஆபத்தை […]
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகேயுள்ள களத்துப்பட்டியைச் சேர்ந்த விவசாயி மச்சக்காளையின் இரண்டாவது மகள் ரூபிகா (வயது 21). இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடியைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. பாண்டி திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். புதுமணத் தம்பதிகளான பாண்டி மற்றும் ரூபிகா இருவரும், தங்களின் முதல் தீபாவளியை கொண்டாடுவதற்காக கடந்த 19-ஆம் தேதி ரூபிகாவின் சொந்த ஊரான […]
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (74) திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 23) அதிகாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொன்னுசாமி மறைவு செய்தி திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் […]
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) அறிவித்திருந்த இரண்டாம் நிலைக் காவலர், சிறை வார்டர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் 2,833 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் 180 காலிப் பணியிடங்கள், மற்றும் தீயணைப்புத் துறையில் 631 தீயணைப்பாளர் பணியிடங்கள் என மொத்தம் 3,644 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த […]
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த மிகக் கோரமான ரயில் விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். பரூனி-கதிகார் ரயில் பாதையில் உள்ள உமேஷ் நகர் ரயில் நிலையம் அருகே இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த 4 பேரும் காளி பூஜை திருவிழாவைப் பார்த்துவிட்டு, அதிகாலையில் தங்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்தில் சிக்கினர். சாகேப்பூர் […]
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் நோக்கி 166 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற இண்டிகோ விமானத்தில் (விமான எண்: 6E 6961) நடுவானில் திடீரென எரிபொருள் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் வகையில், விமானம் அவசரமாக வாரணாசி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்த இந்த விமானத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதை விமானி உடனடியாக கவனித்தார். […]

