கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது வீட்டில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கங்கொண்டனஹள்ளி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த 27 வயதான அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள், நேற்று முன்தினம் இரவு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது. அந்தக் கும்பல், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரை மிரட்டி […]
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் புஷ்பா (30), தனது காதலனும் சக யூடியூபருமான சந்தீப்பால் (32) கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் சேனல் தொடங்கி நல்ல வருமானம் ஈட்டி வந்த புஷ்பா, தனது கணவரை விட்டுப் பிரிந்து ஹர்ஷனா கிராமத்தைச் சேர்ந்த சந்தீப்புடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இருவரும் இணைந்து ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வந்த நிலையில், புஷ்பா […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மீனாட்சிபுரம் தெருவைச் சேர்ந்த பிரேம் சரண் என்பவரின் மனைவி முத்துலட்சுமி (26). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லை. கணவர் பிரேம் சரண் அரசு குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணிபுரிகிறார். சமீபகாலமாக முத்துலட்சுமியின் நடத்தையில் மாற்றம் காணப்பட்டதால் கணவன், மனைவிக்குள் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் அவர் அதே பகுதியில் உள்ள தனது தாத்தாவின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், […]
2025 ஆம் ஆண்டும் பருவமழை காலம் தொடங்கிவிட்டது. பருவமழை குளிர்ச்சியையும் நிம்மதியையும் அளித்தாலும், சாலைகளில் வாகனம் ஓட்டும் சவாலையும் உடன் கொண்டு வருகிறது. நீர் தேங்கிய சாலைகள், போக்குவரத்து நெரிசல்கள், திடீர் பள்ளங்கள் ஆகியவற்றைக் கடந்து பாதுகாப்பாகப் பயணிக்க, சில விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். நீர் தேங்கிய சாலைகளைத் தவிர்ப்பது அவசியம் : முன்னால் செல்லும் வாகனம் பாதுகாப்பாக கடந்துவிட்டது என்பதற்காக, அதே பாதையைப் பின்பற்றி நாமும் செல்லலாம் […]
சரும அழகைப் பராமரிப்பதில் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவது, சமீபகாலமாக பிரபலங்கள் மத்தியில் தொடங்கி பொதுமக்கள் வரை ட்ரெண்டாகி வருகிறது. ஒரு சிறிய ஐஸ் கட்டியைக் கொண்டு முகத்தில் மசாஜ் (Facial Massage) செய்வது, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத் துளைகளைச் சுருக்கி, வீக்கம் மற்றும் சிவந்த புள்ளிகளை குறைக்கிறது. இதனால் சருமம் மென்மையாகவும், இளமையாகவும் இருக்கும். இந்த எளிய முறை சருமப் பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவுவதால், இதை எத்தனை முறை […]
கண் கண்ணாடி அணிபவர்களுக்கு லென்ஸ்களில் கீறல் விழுவது தவிர்க்க முடியாத சவாலாகும். இந்த கீறல்கள் பார்வையின் தெளிவைக் குறைத்து, புதிய கண்ணாடிகளை வாங்கும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும். அதிக செலவில் புதிய லென்ஸ்களை மாற்றுவதற்கு முன், உங்கள் கண்ணாடி லென்ஸ்களில் உள்ள சிறிய கீறல்களைக் குறைக்க உதவும் சில எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். பல் துலக்கும் பேஸ்ட் : பல் துலக்கும் பேஸ்ட் இந்த சிக்கலுக்கான […]
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய இடங்கள் மட்டுமின்றி, பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களுக்குச் சமூக ஊடகங்கள் வழியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை ஒட்டியுள்ள செவ்வாபேட்டை, பருத்திப்பட்டு மற்றும் திருமழிசை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 3 பள்ளிகளுக்கு மர்ம நபர் […]
நைஜீரியாவின் மத்திய மாகாணமான நைஜர் மாநிலத்தில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்த சம்பவத்தில் 42 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 52 பேர் காயமடைந்துள்ளனர். பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி, சாலையின் மோசமான நிலை காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து, பிடா-அகை சாலையில் உள்ள எஸ்ஸான் மற்றும் படெகி கிராமங்களுக்கு அருகே கவிழ்ந்தது. அப்போது, டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல் சிந்தியதைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள், ஆபத்தை […]
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகேயுள்ள களத்துப்பட்டியைச் சேர்ந்த விவசாயி மச்சக்காளையின் இரண்டாவது மகள் ரூபிகா (வயது 21). இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடியைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. பாண்டி திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். புதுமணத் தம்பதிகளான பாண்டி மற்றும் ரூபிகா இருவரும், தங்களின் முதல் தீபாவளியை கொண்டாடுவதற்காக கடந்த 19-ஆம் தேதி ரூபிகாவின் சொந்த ஊரான […]
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (74) திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 23) அதிகாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொன்னுசாமி மறைவு செய்தி திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் […]

