சமையலில் அத்தியாவசியப் பொருட்களாக இருக்கும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை நிலவரம் தான் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் மாத பட்ஜெட்டை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரசம் முதல் பிரியாணி வரை அனைத்து உணவுகளிலும் இவற்றுக்கு முக்கிய இடம் இருப்பதால், காய்கறி சந்தைக்குச் செல்வோர் மற்ற பொருட்களை வாங்கினாலும் இந்த இரண்டையும் அதிக அளவில் வாங்குவது வழக்கம். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக குறைந்திருந்த தக்காளி விலை, தற்போது […]

திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், ஆட்சிக்கு வந்தப் பிறகு 2023 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, முதலில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், சுமார் 1.15 கோடி பெண்கள் மட்டுமே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். உரிமைத் தொகை கிடைக்கப் பெறாத குடும்பங்கள் அரசின் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, […]

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வரும் அக்டோபர் 27-ஆம் தேதி இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறக்கூடும் என்றும், இதன் தாக்கத்தால் அக்டோபர் 28-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு […]

உலகப் பொருளாதார நிலை மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலையைப் பொறுத்து, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஆட்டம் காட்டிய தங்கத்தின் விலையில் நேற்று (அக்டோபர் 24) மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்றைய காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் ஏற்றம் கண்டிருந்த தங்கத்தின் விலை, மாலையில் திடீரென சரிவை சந்தித்தது. ஒரே நாளில் சுமார் 75 அமெரிக்க டாலர்கள் […]

இந்தியப் பாரம்பரியத்தில் தங்கம் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது. பல நூற்றாண்டுகளாக மங்களகரமான சின்னமாக விளங்கும் தங்கம், திருமணம், பிறந்தநாள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத அங்கமாகவும், சேமிப்பு மற்றும் முதலீட்டின் முக்கிய ஆதாரமாகவும் இருந்து வருகிறது. இருப்பினும், தற்போது நிதி மற்றும் தொழில் துறை நிபுணர்கள், எதிர்காலத்தில் துத்தநாகம் (Zinc) என்ற உலோகம் தங்கத்தை விட அதிக மதிப்புமிக்கதாகவும், அதிக தேவை உள்ளதாகவும் மாறக்கூடும் என்று கணித்துள்ளனர். […]

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம், நாட்டையே உலுக்கியது. அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்துயரச் சம்பவம் நடந்தபோது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் நேரில் ஆறுதல் கூறாதது சமூக வலைதளங்களில் பலத்த கண்டனங்களை எழுப்பியது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ‘வீடியோ கால்’ மூலம் […]

துளசி என்பது இந்து மதத்தில் நம்பிக்கை, செழிப்பு மற்றும் தூய்மையின் அடையாளமாக போற்றப்படுகிறது. இந்து மத நம்பிக்கைகளின்படி, துளசி மிகவும் புனிதமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. துளசிச் செடி இருக்குமிடத்தில் எதிர்மறை ஆற்றல் நிலைக்காது என்றும், வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் எப்போதும் நிறைந்திருக்கும் என்றும் நம்பப்படுகிறது. துளசி தேவியை வழிபடுவதன் மூலம் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் அருளைப் பெற முடியும் என வேதங்கள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக, துளசி தொடர்பான […]

தற்போது கந்த சஷ்டி விரதம் தொடங்கியிருக்கும் நிலையில், நம் அனைவராலும் விரும்பிப் பாடப்படும் கந்த சஷ்டி கவசம் பாடலின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் குறித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்தப் பாடலைத் தினமும் ஓதுவதால் உடலில் நேர்மறை ஆற்றல் பெருகி, சுறுசுறுப்பு அதிகரிக்கும் என்றும், அதனால் நம் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக அமையும் என்றும் நம்பப்படுகிறது. இத்தகைய மன நிம்மதி தரும் வரிகளை வழங்கியவர் தேவராய சுவாமிகள் […]

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் பாலியல் புரோக்கர்களை கைது செய்ய காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டதை தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழில் நடத்தி வந்த ஒரு புரோக்கரை நெற்குன்றம் பகுதியில் காவல்துறையினர் கைது செய்தனர். நெற்குன்றம் கோல்டலன் ஜார்ஜ் நகர் பகுதியில் […]

ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா மாவட்டத்தில், விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவியை அவரது தாத்தாவாக நடித்து அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 62 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். காக்கிநாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பிந்து மாதவ் கரிகாபதி அளித்த தகவலின்படி, டி. நாராயண ராவ் என்ற அந்த முதியவர், அரசுப் […]