தமிழக மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வரும்போதெல்லாம், அவர்களை எல்லைத்தாண்டி வந்ததாக கூறி கைது செய்து, படகுகளைப் பறிமுதல் செய்வது இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஒரே இரவில் 47 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று (அக்.8) ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசியதாக வெளியான பரபரப்பான தகவல்களுக்கு மத்தியில், அவர் மக்கள் மத்தியில் கூட்டணி குறித்தும், திமுக அரசு குறித்தும் அதிரடியான கருத்துக்களை கூறியுள்ளார். கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அமைத்திருப்பது “வெற்றுக் கூட்டணி” என்று விமர்சித்தார். அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்று சூளுரைத்த அவர், இந்தக் கூட்டத்தில் தவெக […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மிகவும் தொன்மை வாய்ந்த வதாரண்யேஸ்வரர் கோவில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில், மூலவராக வதாரண்யேஸ்வரர் தாயார் ஞானாம்பிகையுடன் இணைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த மூலவர், பக்தர்களுக்கு அறிவு, செல்வம், மற்றும் ஆரோக்கியத்தை வாரி வழங்குவதாக போற்றப்படுகிறார். பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி, ஒரு வள்ளலைப் போல அனைத்தையும் வாரி வழங்குவதால், இந்த கோவில் ‘வள்ளலார் கோவில்’ என்றும் பக்தர்களால் […]
கர்நாடக மாநிலம் குடகு பகுதியைச் சேர்ந்த 45 வயது நபர், தனது குடும்பத்துடன் காசர்கோடு பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது 14 வயது மகளுக்கு சமீபத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சிறுமியை மங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பெற்றோர் பரிசோதனை செய்தபோது, சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக இது குறித்துப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், […]
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர், தனது உறவினரின் சதி காரணமாக 7 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாமர் காவல் நிலையப் பொறுப்பாளர் பிரவீன் குமார் மோடி அளித்துள்ள தகவலின்படி, இந்தச் சம்பவம் செப்.30ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. தசரா திருவிழாவை காண மர்தான் மோரில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருமாறு பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது உறவினர் அழைத்துள்ளார். அங்கு […]
விழுப்புரம் மாவட்டம் மரகதபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவர் கரும்புத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே கரும்புத் தோட்டத்தில் கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்த அம்பிகா என்ற பெண்ணுடன் சங்கருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் சங்கர் வேலையை முடித்ததும் தன் வீட்டிற்கு செல்லாமல், பெரும்பாலும் அம்பிகாவின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். இந்த சூழலில், இருவேல் […]
அமெரிக்காவின் இந்திய வம்சாவளியினருக்கு பெருமை சேர்க்கும் வகையில், கலிபோர்னியா மாகாணத்தில் இந்துக்கள் மற்றும் தெற்காசிய சமூகத்தினரின் முக்கியப் பண்டிகையான தீபாவளிக்கு இனி அதிகாரப்பூர்வ மாநில விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் (Gavin Newsom) சட்டமன்ற மசோதாவில் கையெழுத்திட்டதன் மூலம், இந்த அறிவிப்பு சட்டமாகியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு, கலிபோர்னியாவில் வசிக்கும் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான தெற்காசிய வம்சாவளியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் நியூசம் […]
மனித குலத்திற்கு கிடைத்த அருமையான மூலிகைகளில் ஒன்று கறிவேப்பிலை. முருங்கைக்கீரைக்கு அடுத்தபடியாக உணவில் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கும் கறிவேப்பிலையில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் A, B, C, E, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. கறிவேப்பிலையை எந்த வடிவத்தில் உட்கொண்டாலும் சத்துக்கள் கிடைக்கும் என்றாலும், அதனை தண்ணீரில் ஊறவைத்து அருந்துவதன் மூலம் பல மடங்கு கூடுதல் பலன்களைப் பெறலாம். உடல் எடை குறைப்பு : […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் ஜோஸ் மரிய ராகுல் (28). இவர் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் நட்பை வளர்த்துள்ளார். பெற்றோரை இழந்த அந்த மாணவி, தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றபோதும், “நாம் திருமணம் செய்து கொள்ளலாம்.. உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன்” என்று ராகுல் ஆசை […]
90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சீதா. வெள்ளித்திரை மட்டுமல்லாமல், சின்னத்திரை சீரியல்கள், வெப் சீரிஸ் என காலத்துக்கு தகுந்தாற்போல் தன்னைத் தகவமைத்துக் கொண்ட சீதா, தற்போது தனது சமீபத்திய தோற்றத்தால் திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளார். சீதா தனது திரைப்பயணத்தை 1985-ஆம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ‘ஆண் பாவம்’ திரைப்படத்தின் […]

