fbpx

ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து ராயப்பேட்டை போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஓபிஎஸ் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றபோது ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக அலுவலகத்தில் …

மின் கட்டண உயர்வு விவகாரத்தில் மத்திய அரசை குறை சொல்வதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டு மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுங்கள்’ என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ”அதிமுக உட்கட்சி சண்டை பற்றி எதற்கு பேசிக் கொண்டு இருக்க வேண்டும். எல்லாம் தானாக …

வேளச்சேரியில் திருமணமான ஐந்து மாதத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் இந்துமதி. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் தி.நகரைச் சேர்ந்த குமரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டிற்கு வந்த இந்துமதியை குமரனின் தாயார் …

இலங்கையில் நடந்த கலவரம் போல் இங்கேயும் கலவரம் நடந்திருப்பது வெட்கக்கேடாக இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், திமுக அரசு சென்ற ஆண்டு முதல் தற்போது வரை …

பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவர்களைக் கண்டறிய ‘Search for doctor app’ என்ற செயலியை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Search for doctor app-இல், அஞ்சல் குறியீட்டு எண் அல்லது பகுதியை உள்ளீடு செய்து தேடினால், அந்த பகுதியில் உள்ள மருத்துவர்கள் பட்டியல் கிடைக்கும். மேலும், மருத்துவர்களின் அனுபவம், எந்த துறையில் வல்லுநர் …

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக தனியார் பள்ளிகளை முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் 17ஆம் தேதி வன்முறையாக மாறியது. பின்னர் நீதிமன்ற …

ரப்பர் படகு மூலம் கடல் வழியாக தமிழகத்திற்கு நுழைந்த மர்ம நபரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் அருகே முனைக்காடு பகுதியில் நேற்று காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கி நின்று கொண்டிருந்தது. இதையடுத்து, தகவல் அறிந்த வேதாரண்யம் …

தமிழகத்தில் அதிகரித்துள்ள போதைபொருள் கலாசராத்திற்கு எதிராக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 30ஆம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தவிருப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் கலாச்சாரம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. …

கடலூர் எஸ்.பி. அலுவலகம் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மனைவியை கொடூரக் கொலை செய்து நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழ்காங்கேயன்குப்பத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சதாசிவம். இவரது மனைவி மலர்க்கொடி. இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். …

புளூட்டோவின் (PLUTO) வண்ணமயமான படத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா வெளியிட்டுள்ளது.

சூரிய குடும்பத்தில் மிகவும் தொலைவில் உள்ளது புளூட்டோ. கிரகம் என்ற அந்தஸ்தை புளுட்டோ இழந்தாலும் அது குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நாசா தனது நியூ ஹாரிஜான் தொலைநோக்கி எடுத்த புளூட்டோவின் படங்களை வெளியிட்டு …