வங்கி வாடிக்கையாளர்களே!… KYC-களை புதுப்பிக்க இன்றுதான் கடைசி நாள்!

வங்கி வாடிக்கையாளர்களின் KYC-களை புதுப்பிக்க இன்றுடன் (மார்ச் 19) கால அவகாசம் முடிவடைகிறது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது..

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் KYC-களை புதுப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2023 டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலும் KYC சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு, மார்ச் 19 (இன்று) வரை கால அவகாசம் வழங்கி இருந்தனர்.

இந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளதால் இதுவரை KYC சரிபார்ப்பை முடிக்காதவர்கள் புகைப்படம், ஐடி, பான் கார்டு உள்ளிட்ட KYC பணியை வங்கிக்கு நேரடியாக சென்றோ அல்லது PNB ஆப் மூலமாகவோ மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். அப்படி செய்யவில்லை என்றால், அந்த வாடிக்கையாளர்களின் கணக்கு முடக்கப்படவும் வாய்ப்பு உள்ளது எனவும் எச்சரித்துள்ளனர்.

Readmore: CAA சட்டத்திற்கு எதிராக குவிந்த மனுக்கள்!… உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Kokila

Next Post

Modi: 1 லட்சம் பேர்!… அதிரும் சேலம்!… இன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம்!… பிரதமருடன் கைகோர்க்கும் தலைவர்கள்!

Tue Mar 19 , 2024
Modi: சேலத்தில் இன்று நடைபெறவுள்ள பாஜக பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார். ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் என்பதால் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 16ம் தேதி பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் […]

You May Like