படுத்த படுக்கையான கணவன்..!! அடிக்கடி வந்த போன கள்ளக்காதலன்..!! ஆணுறுப்பில் சரமாரி தாக்கு..!! மனைவியின் பலே நாடகம்..!!

Bangalore 2026

பெங்களூருவில் பக்கவாத நோயால் படுத்த படுக்கையாக இருந்த கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக நாடகமாடி, அவரை தனது கள்ளக்காதலன் மற்றும் தாயுடன் இணைந்து மனைவியே கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


பெங்களூரு யெல்லப்பா கார்டன் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா (40) என்பவருக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகின்றன. இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாஷாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் படுக்கையிலேயே முடங்கினார். கணவரை தொடர்ந்து கவனித்துக் கொள்வதில் மனைவி ஷஹீனா பானுவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில், குடும்ப நண்பரான நஹீம் உத்தின் குரேஷி என்பவர் பாஷாவின் குடும்பத்திற்கு உதவ வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். நாளடைவில் இது பானுவுக்கும் குரேஷிக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது.

தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பாஷாவை கொலை செய்ய திட்டமிட்ட பானு, தனது தாய் ஹசீனா ஜானுவிடமும் இதுபற்றி கூறி சம்மதம் பெற்றுள்ளார். அதன்படி, கடந்த செப்டம்பர் 9ம் தேதி இரவு பாஷா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, மூவரும் சேர்ந்து அவரது கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளனர். திடுக்கிட்டு விழித்த பாஷா அவர்களிடமிருந்து தப்பிக்க போராடியுள்ளார். எனினும், அவரது முகம் மற்றும் பிறப்புறுப்பில் மூவரும் சரமாரியாக தாக்கியதில் மூச்சுத்திணறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, கணவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக உறவினர்களுக்கு பானு தகவல் கொடுத்துள்ளார். ஆனால், பாஷாவின் சடலத்தில் இருந்த காயங்களை கண்டு சந்தேகமடைந்த அவரது சகோதரர் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். உடற்கூறாய்வு அறிக்கையில் அவர் மூச்சுத்திணறலாலும் கொடூர தாக்குதலாலும் உயிரிழந்தது அம்பலமானது. இதையடுத்து எஸ்கேப் ஆக முயன்ற மனைவி ஷஹீனா பானு, கள்ளக்காதலன் குரேஷி, மாமியார் ஹசீனா ஜானு ஆகிய 3 பேரையும் கொலை வழக்கில் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : மகனையே ஒழுங்காக வளர்க்காத ஸ்டாலின்..!! கடுமையாக விமர்சித்த அமைச்சர் ரமேஷ்..!!

Next Post

பிரதமர் மோடிக்காக செப்.17ம் தேதி வீடுதோறும் தீபம் ஏற்றுங்கள்..!! பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Mon Sep 14 , 2026
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டும், அவர் பொதுவாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டியும் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் ‘ஆசீர்வாத தீபம்’ ஏற்ற வேண்டும் என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 தொடங்கி அக்டோபர் 17 வரை ஒரு மாத காலத்திற்கு நாடு தழுவிய அளவில் பல்வேறு மக்கள் நல்வாழ்வு மற்றும் சேவை இயக்கங்களை […]
pm modi in norway

You May Like