Big Breaking : திடீர் ட்விஸ்ட்.. 2 நாட்களில் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.. ஆளுநர் உத்தரவு.!

vijay governor

2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. ஆனால் ஆட்சியமைக்க, தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது..  


மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. ஆனால் தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை.. எனினும் விஜய் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரி உள்ளார்.. கவர்னரும் அதற்கு அனுமதி அளிப்பார்.. ஆனால் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு சட்டசபையில் குறிப்பிட்ட நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்..

இதனிடையே தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் மதவாத சக்திகளை கூட்டணியில் இணைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் தவெக உடன் கூட்டணி அமைப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.. இதனால் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ளது.. தவெக ஆட்சியமைக்க மேலும் 5 எம்.எல்.ஏக்கள் தேவை.. எனவே தவெக விசிக, கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது..

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. இன்று மக்கள் மாளிகைக்கு சென்ற பொறுப்பு ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. அப்போது தவெக மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், வெங்கட் ரமணன் ஆகியோர் உடனிருந்தனர்.

எனினும் 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்காததால் விஜய் 2 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டார். அதாவது விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து 48 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்..

தவெக தலைவர் விஜய் நாளை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.. நாளை காலை 11 மணிக்கு அவரது பதவியேற்பு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.. இந்த விழாவில் 5000 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. நாளை விஜய் முதலமைச்சராக பதவியேற்றால் 9-ம் தேதிக்குள் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.. கால அவகாசம் குறைவாக உள்ளதால் விஜய் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..

RUPA

Next Post

'மரியாதைக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்' ஆளுநர் மாளிகை வெளியிட்ட குறிப்பால் சர்ச்சை..!

Wed May 6 , 2026
Controversy over note issued by Governor's House calling him 'Honorable Tamil Nadu Chief Minister Vijay'!
vijay governer1

You May Like