இந்தியாவில் அதிகமாக கிரிமினல்களை சேர்க்கும் கட்சி பாஜக…! அமைச்சர் ரகுபதி விமர்சனம்…!

ragupathy 2025

இந்தியாவில் கிரிமினல்களை அதிகமாக சேர்க்கும் கட்சி பாஜக என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார் ‌

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி; பழனியில் அமைச்சர் சேகர்பாபு முருகன் பக்தர் மாநாடை சிறப்பாக நடத்தி முடித்தார். தமிழகத்தில் ராமா ராமா என்று சொல்லிப் பார்த்தார்கள் அது எடுபடவில்லை. தமிழ் கடவுள் முருகன் பெயரை சொல்லியாவது மாற்று வேடத்தில் வரலாம் என உள்ளே வருகின்றனர் பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை. ஆன்மீகத்துக்கு எதிரான அரசியலுக்கு தமிழ்நாடு களமல்ல. தமிழ்நாட்டை திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கின்றார். அதற்கு போட்டியாக யார் நடத்தினாலும் அவருக்கு இணையாகது. தமிழ்நாட்டு மக்களை முருகன் பெயரை சொல்லி ஏமாற்ற முடியாது.


இந்தியாவில் கிரிமினல்களை அதிகமாக சேர்க்கும் கட்சி பாஜக என்பதுதான். பாஜகவில் இருப்பவர்கள் அதிகமானோர் குற்றவாளிகள்தான். எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்தெந்த மாநிலத்தில் இருக்கிறார்கள் உள்ளிட்டவைகளை ஆதாரத்துடன் நாங்கள் தெரிவித்து இருந்தோம். கிரிமினல் குற்றவாளிக்கு அடைக்கலம் தரும் கட்சி பாஜக. ஆனால் கட்சியில் கிரிமினல்கள் இருக்கிறார்கள் என தெரிந்தால் உடனே அவர்களை வெளியேற்றும் கட்சிதான் திமுக.

பூனை கண்ணை மூடி கொண்டால் இருண்டு விடும்’ என்று சொல்வார்கள். அதுபோல எடப்பாடி பழனிசாமிக்கு எதைப் பார்த்தாலும் பாதுகாப்பு இல்லை என சொல்வதே வழக்கமாக போய்விட்டது. அவர் காலையில் எழுந்த உடனே பாதுகாப்பு இல்லை என சொல்வதும் கூச்சலிடுவதும் அவருடைய தினசரி பணியாகி விடுகிறது.கீழடி நாகரிகத்தை உலகத்திற்கு கொண்டு சேர்த்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் மட்டும் முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால், கீழடி நாகரிகம் இருக்கிறது என்பதே தெரியாமல் போயிருக்கும்.

அதற்கு முழு முயற்சி எடுத்த அரசு திமுக அரசுதான். மற்றவர்கள் எதை சொன்னாலும் தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள். தொன்மையான நாகரிகத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டுவது முதலமைச்சர் விட வேற யாரும் இல்லை. எடப்பாடி பழனிசாமி விவசாயி இல்லை. தோளில் கலப்பை வைத்தவர்கள் எல்லாம் விவசாயிகள் இல்லை. அவர் எந்த களத்தில் இறங்கி விவசாயம் செய்தார். எடப்பாடி பழனிசாமி ஒரு போலி விவசாயி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதில் ஒரு தவறும் இல்லை என்றார்.

Read more: முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் மதுரை உயர் நீதிமன்றம் அனுமதி…!

Vignesh

Next Post

நடுவானில் புகை.. அவசர அவசரமாக தரையிரக்கப்பட்ட லண்டன் விமானம்..!! பெரும் பரபரப்பு..

Mon Jun 16 , 2025
லண்டனின் ஹீத்ரோவில் இருந்து சென்னை உறப்பட்ட விமானத்தில் நடுவானில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரிட்டிஷ் ஏர்வேஸின் BA35 என்ற விமானம், போயிங் 787-8 ட்ரீம்லைனர் மூலம் இயக்கப்பட்டது. இது ஹீத்ரோவிலிருந்து புறப்பட்டு ஒரு மணிநேரம் கழித்து, நடு வானில் புகை வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் ஹீத்ரோவுக்கே திரும்பி வந்தது. விமானம் டோவர் ஜலசந்தி பகுதியில் பல முறை சுற்றி வட்டமிட்ட பின்னர் பாதுகாப்பாக […]
british airways

You May Like