Breaking : அம்பாசமுத்திரம் தொகுதியும் காலியானதாக அறிவிப்பு.. 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது..?

isakki subbaiya resign

அதிமுக தற்போது இரண்டு அணிகளாக பிளவுபடுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.. அந்த வகையில் நேற்று எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த 5 எம்.எல்.ஏக்கள் இபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டனர்.. மேலும் 3 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விட்டனர்.. இந்த ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் நேற்றே அறிவித்திருந்தார்.


இந்த சூழலில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.. தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் வழங்கினார்.. இதையடுத்து இசக்கி சுப்பையாவின் ராஜினா ஏற்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்..

இந்த நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாடு அரசின் கெசட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறையை தொடர்ந்து தற்போது அம்பாசமுத்திரம் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்..?

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. ஆனால் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.. இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் ராஜினாமா செய்ததால் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடத்தியாக வேண்டும். அந்த வகையில் நவம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : “இதை ஏற்க முடியாது.. இது தவெகவின் எதிர்கால அரசியலுக்கு உகந்ததல்ல..” திருமா பரபரப்பு பேட்டி..!

English Summary

Following Trichy East, Maduranthakam, Dharapuram, and Perundurai, the Ambasamudram constituency has now also been declared vacant.

RUPA

Next Post

புது ட்விஸ்ட்..! அண்ணாமலையின் அதிரடி மூவ்..! புதிதாக மாறும் அரசியல் களம்..! அப்ப அதிமுக..?

Wed May 27 , 2026
A post shared by Annamalai has lent weight to speculations regarding a new political party.
vijay udhay annamalai

You May Like