Breaking : 2 நாட்களில் ரூ.3,360 குறைந்த தங்கம் விலை..! நகை வாங்க காத்திருந்தவர்கள் ஹேப்பி..!

ChatGPT Image Jul 1 2025 09 24 01 AM 1 1

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து ரூ.1,05,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.210 குறைந்து ரூ.13,140-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து ரூ.1,05,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை 2 நாட்களில் மட்டும் ரூ.3,360 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.230க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2.30 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : இன்னும் PAN கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க முடியலயா? இந்த சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும்..! ஒருமுறை செக் பண்ணுங்க..!

English Summary

In Chennai, the price of ornamental gold has decreased by ₹1,680 per sovereign and is being sold at ₹1,05,120.

RUPA

Next Post

“இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சமாட்டோம்.. இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள்..” ஸ்டாலின் பரபரப்பு பதிவு..!

Thu Jun 25 , 2026
M.K. Stalin has stated that they will not be intimidated by threats from the ruling party, even as the Directorate of Vigilance and Anti-Corruption conducts raids on premises belonging to E.V. Velu.
stalin dmk n

You May Like