fbpx

BREAKING: 12 மாவட்டங்களுக்கு புயல் ‘ஹை’ அலர்ட்.! அதிரடி நடவடிக்கையில் முதல்வர் ஸ்டாலின்.!

கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் பரவலான கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அப்போது மிக்ஜாம் புயல் தமிழகத்தை தாக்கும் அபாயம் இருப்பதால் மாநிலம் முழுவதும் அவசரநிலை நடவடிக்கைகள் முழுவீச்சில் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் தாக்கும் அபாயம் இருப்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி தடுப்பு நடவடிக்கைகளை ஆலோசித்து வருகிறார். புயல் தாக்கும் அபாயம் இருக்கும் 12 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

இது தொடர்பாக அந்த 12 மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார் ஸ்டாலின். புயல் தாக்கும் மாவட்டங்களில் பொது மக்களுக்கு தங்கும் வசதி அவர்களுக்கு தேவையான உணவு வழங்குவதற்கான சமையல் கூடங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் புயல் காலத்தில் போக்குவரத்து வசதிகளை சீர் செய்வது தொடர்பாகவும் மழைநீர் தேங்காதவாறு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் படியும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்து செல்ல தினங்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் புயல் எச்சரிக்கையும் விடப்பட்டிருப்பதால் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

Next Post

பரபரப்பு.! 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! மாநிலம் முழுவதும் தீவிர சோதனை.!

Fri Dec 1 , 2023
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் உள்ள 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒடுக்கப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிரமான சோதனை நடைபெற்று வருகிறது. பெங்களூரில் இயங்கி வரும் 15 பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முழு வீச்சில் இறங்கி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் […]

You May Like