fbpx

டெல்லி: அடக்கொடுமையே.! தூய்மை பணியில் இருந்த 12 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.! பெண் உட்பட 5 பேர் கைது.!

தலைநகர் டெல்லியை சார்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லி நகரைச் சேர்ந்த 12 வயது சிறுமி துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது பகுதியைச் சேர்ந்த நான்கு நபர்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் குப்பையை சுத்தம் செய்வதற்காக அந்த பெண்ணை அழைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியும் குப்பை சுத்தம் செய்வதற்கு சென்று இருக்கிறார்.

இந்நிலையில் 4 பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வெளியே கூறினால் விரட்டி இருக்கின்றனர். எனினும் இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த பெண் உட்பட ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 12 வயது சிறுமி பாலியல் வன்ப்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை உடனடியாக அதிகரிக்க செய்யும் உணவுகள்.! என்னென்ன தெரியுமா.?!

Sun Jan 7 , 2024
ஹீமோகுளோபின் என்பது  உடலுக்கு ஆக்சிஜனை கடத்தும் இரும்பு சத்து கொண்ட நீர்ம கடத்தியாக செயல்படுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும்பொழுது உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஹீமோகுளோபின் அளவு என்பது ஆண்களுக்கு உடலில் 13லிருந்து 17.5 கிராம் வரையும், பெண்களுக்கு 12 முதல் 15.5 கிராம் வரை இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றன. இந்த அளவு உடலில் குறைந்தால் அவற்றை உணவின் மூலம் எளிதாக சரி […]

You May Like