சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று, அந்த பெண் தனது மூத்த மகளுடன் வெளியே சென்றிருந்த நிலையில், அவரது 13 வயதான இளைய மகள், வீட்டுக்கு வெளியே தனது தோழிகளுடன் விளையாடியுள்ளார். சிறுமி வீட்டில் யாரும் இல்லாததை பக்கத்து வீட்டுக்கு வந்திருந்த பெயின்டர், 49 வயதான இளையராஜா என்பவர் நோட்டமிட்டுள்ளார். இந்நிலையில், சிறுமி மீது அவருக்கு ஆசை ஏற்படவே, அவர் சிறுமியிடம் நைசாக பேசி, அவரை தனி அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர், அந்த அறையில் வைத்து அவர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கதறி அழுததை அடுத்து, பெயிண்டர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். பின்னர் வெளியே சென்ற தாய் வீட்டிற்க்கு வந்ததும், சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை எல்லாம் கூறி அழுதுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த தாய், சம்பவம் குறித்து உடனடியாக புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பெயிண்டர் இளையராஜாவை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இளையராஜா சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மீது போக்சோ உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
Read more: சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேற அதிமுக MLA-க்கள் தான் காரணம்..!! – அப்பாவு