இந்த காலகட்டத்தில் பல இடங்களில் மணமகன்கள் மணப்பெண்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.அதனை நிரூபிக்கும் வகையில் இந்த திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சியில் ஆண்கள் கூட்டம் நிரம்பிய சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநில பகுதியில் உள்ள மண்டியா என்கிற மாவட்டத்தில், திருமணத்திற்கு வரன் பார்க்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ‘ஒக்கலிகா மணமக்கள் மாநாடு’ என்கிற பெயரில் சென்ற ஞாயிறு கிழமை அன்று நடைபெற்றது.
இந்த நிலையில் திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சியில் சுமார் 14,000 ஆண்கள் அவர்களின் ஜாதகத்துடன் பதிவு செய்துள்ளனர். இதில் பெண்கள் திருமண வரன் நிகழ்ச்சியில் பங்குபெறுதற்கு 250 பதிவுகள் மட்டுமே செய்திருந்தனர்.
மணமகன்கள் கடலாக திரண்ட செயல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.