பள்ளிக்கல்வித்துறையில் 14,019 தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், 202-23 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என்று 4,019 பணியிடங்களை நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மை குழு மூலமாக தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மதிப்பூதியமாக 12,000, பட்டதாரி ஆசிரியருக்கு மதிப்பூதியம் 15,000, முதுகலை ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் 18,000 என்று வழங்க அரசு உத்தரவிடப்படுகிறது. வரும் ஆண்டுகளில் தொடக்க கல்வி துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் அல்லது பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை மாணவர்களின் நலனை கருதி ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் நிரப்பப்பட்ட நிரந்தரப் பணியிடங்கள் தவிர்த்து மீதி உள்ள பணியிடங்களுக்கு மட்டுமே தற்காலிக அடிப்படையில் நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.