fbpx

15 நாள் பயணம்… இன்று இரவு 10 மணிக்கு அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின்…!

முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். விமான நிலையத்தில் அமைச்சர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் முதல்வரை வழியனுப்ப உள்ளனர். வேலைவாய்ப்பு, உயர்தர முதலீடு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த பயணத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

நாளை சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில், தொழில் தொடங்க தமிழகம் வருமாறு முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுப்பதுடன், முக்கிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. 31-ம் தேதி, புலம்பெயர்ந்த தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார். செப்டம்பர் 2-ம் தேதி சிகாகோ செல்கிறார். அங்கு 12-ம் தேதி வரை தங்கும் முதல்வர் ஸ்டாலின், ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசுகிறார்.

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளார். செப்டம்பர் 7-ம் தேதி அயலக தமிழர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அமெரிக்காவில் 17 நாட்கள் தங்கி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 12-ம் தேதி சென்னை திருப்ப உள்ளார்.

English Summary

15-day trip… Chief Minister Stalin will leave for America at 10 tonight

Vignesh

Next Post

NCERT அதிரடி... 12-ம் வகுப்பு மார்க் சீட்டில் 9,10 & 11-ம் வகுப்பு மதிப்பெண்கள்...!

Tue Aug 27 , 2024
Class 9,10 & 11 Marks in Class 12 Mark Sheet

You May Like