தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் பட்டம் விட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஹைதராபாத் அருகே உள்ள ஏத்தாப்பூர் கிராமத்தில் 15 வயது சிறுவனான தன்ஷிக் தனது பேர் குடும்பத்தாருடன் பட்டம் விட்டு விளையாடி இருக்கிறான்.
அப்போது சிறுவன் வெட்ட பட்டம் மின்கம்பியில் உரசியதாக தெரிகிறது. இதனால் மின்சாரம் தாக்கிய சிறுவன் தூக்கி வீசப்பட்டிருக்கிறான் . இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிறுவனை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர் . சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டம் விட்டதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.