fbpx

பெல்டால் கட்டப்பட்டு 8 வயது சிறுமி கொலை.! 16 வயது சிறுவன் மற்றும் தந்தை கைது.! அதிர்ச்சி வாக்குமூலம்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பூட்டிய அறையில் எட்டு வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக 16 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பேல்ஹார் என்ற பகுதியைச் சார்ந்த 8 வயது சிறுமி ஐஸ்கிரீம் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் துறையிடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில் சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த பகுதியை சோதனை இட்டபோது கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமான விசாரணையில் இறங்கினர். அப்போது அதை அடுக்குமாடி குடியிருப்பைச் சார்ந்த 16 வயது சிறுவன் தலைமறைவாய் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உண்மைச் சம்பவம் வெளியாகி இருக்கிறது. கொலை செய்யப்பட்ட சிறுமிக்கும் 16 வயது இளைஞனுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. சிறுமி அந்த இளைஞரை தொடர்ந்து கேலி செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரத்தில் அந்த சிறுமியை கொலை செய்த சிறுவன் அவரது உடலை இரண்டு நாட்களாக வீட்டில் வைத்திருக்கிறார். பின்னர் அவரது தந்தை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஆளில்லாத அறையில் சிறுமியின் உடலை மறைத்து வைத்துவிட்டு தனது மகனை வெளியூருக்கு அனுப்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து தந்தையை கைது செய்த காவல்துறையினர் அவரது மகனையும் கைது செய்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் எட்டு வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

கண் பார்வை இழந்த ஏபி டி வில்லியர்ஸ்!… ஓய்வு காரணம் குறித்து ஓபன் டாக்!

Fri Dec 8 , 2023
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாக, தான் வலது கண் பார்வை குறைபாட்டுடன் விளையாடியதாக ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ். கடந்த 2004 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார். ஒரு நாள் போட்டியில் 2005ம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 8 ஆயிரத்து 765 […]

You May Like