பொதுவாக உத்திரபிரதேசம் என்றாலே, பெண்கள் பாதுகாப்பில் ஒரு வித அச்ச உணர்வு தோன்றத்தான் செய்கிறது. காரணம், அங்கே நடக்கும் பல்வேறு சம்பவங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகவே இருக்கிறது.
அவ்வப்போது, காவல்துறையினர் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டாலும், அது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என்று கருதப்படும் அளவிற்கு அங்கே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில், பள்ளிக்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டு இருந்த ஒரு 16 வயது சிறுமியை, சிலர் அவரிடம் நண்பர்களைப் போல பேசி, ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முதலில், அந்த மாணவியை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி, இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, பின்பு அவருடைய வீட்டிற்கு செல்லாமல், வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல், அந்த மாணவியை கதற, கதற கற்பழித்துள்ளது.
அதன் பின்னர் அந்த மாணவியை அதே இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்து, வேறு இடத்தில் விட்டுவிட்டு, இது பற்றி வெளியே யாரிடமாவது சொன்னால், உன்னை கொலை செய்து விடுவோம் என்று தெரிவித்து, அந்த 17 வயது சிறுமியை மிரட்டி விட்டு சென்ற உள்ளனர்.
ஆனாலும், அந்த கயவர்களின் மிரட்டலுக்கு பயப்படாத அந்த சிறுமி, உடனடியாக காவல் நிலையத்துக்கு சென்று, அங்கே தனக்கு நடந்த கொடுமைகள் அனைத்தையும் காவலர்களிடம் கூறி இருக்கிறார். ஆகவே இது பற்றி உடனடியாக காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர்.
அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணை மூலமாக, இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்,யார் என்பதை கண்டுபிடித்த காவல்துறையினர், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரையும் அதிரடியாக கைது செய்து, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ், அவர்கள் ஐந்து பேரையும் சிறையில் அடைத்துள்ளனர்.