திருவள்ளூர் அருகே சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் மனமுடைந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் அருகேயுள்ள பகுதியைச் சார்ந்த 18 வயது சிறுமி ஒருவர் 4 நபரால் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறார். அவர்களது நடவடிக்கைகள் எல்லை கடந்து கொடூரமாக செல்லவே மனமுடைந்த சிறுமி தனது வாழ்வை முடித்துக் கொள்ள நினைத்து தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
தீயினால் படுகாயமடைந்த சிறுமியை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுமி கொடுத்த புகாரின் பேரில் ஏற்கனவே அந்த 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. பாலியல் தொல்லையினால் சிறுமிகளும் குழந்தைகளும் கொல்லப்படுவதும் தற்கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது. இது பெற்றோர்களிடமும் பெண் குழந்தைகளிடமும் ஒரு வித பய உணர்வை ஏற்படுத்துகிறது.