மத்திய பிரதேசம் மாநிலம், போபால் பகுதியை சார்ந்தவர் ரோகித். இவருக்கும் ரோகினி என்ற பெண் ஒருவருக்கும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. கடந்த இரண்டு மாதமாக கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 1 வாரத்துக்கு முன்பு, தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, அவரை பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு ரோகினி வீட்டை விட்டு சென்றுள்ளார். தனது அம்மாவை பார்க்க சென்ற ரோகினி, தனது கணவர் வீட்டிற்க்கு வரவே இல்லை. தனது மனைவி நீண்ட நாட்கள் ஆகியும் வீட்டிற்க்கு வராததால் சந்தேகம் அடைந்த ரோகித், அவரது மாமியார் வீட்டிற்க்கு சென்றுள்ளார்.
தனது மாமியார் வீட்டில் விசாரித்த போது, ரோகினி அங்கு வரவில்லை என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரோகினியின் கணவர் மற்றும் குடும்பத்தினர், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மாயமான ரோகினியை தேடி வந்தனர்.. விசாரணையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு, ரோகினிக்கு வேறொரு நபருடன் திருமணம் முடிந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் இது குறித்து ரோகினியிடம் விசாரித்த போது, தனது கணவருக்கு அதே பகுதியில் வசிக்கும் இன்னொரு பெண்ணுடன் தவறான தொடர்பு இருந்ததால் தான், வீட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளார். மேலும், தனது கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றும் பிடிவாதமாக கூறியுள்ளார்.
ரோகித், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு ரோகினியை அழைத்தும் ரோகினி அதற்க்கு மறுத்துவிட்டார். இதனால் ரோகினியின் முதல் கணவர் மற்றும் இரண்டாவது கணவர் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் ரோகினியை விசாரித்த போதும், ரோகினி தனது முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது கணவருடன் தான் வாழுவேன் என்று கூறியுள்ளார். இதனால், போலீசார் ரோகினியை தனது இரண்டாவது கணவருடன் அனுப்பி வைத்தனர்.
Read more: மறந்தும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுத்து விடாதீர்கள்..