கோவை ஆர் ஜி புதூரை சேர்ந்தவர் புவனேஸ்வர்(19). தனியார் கல்லூரி மாணவரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கு இடையே முன்னுவிரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய நண்பர்கள் நேற்று முன்தினம் சின்னியம்பாளையத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த சில இளைஞர்களுக்கும், புவனேஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் புவனேஸ்வரன் உயிரிழந்தார். அவருடைய நண்பர் சந்தோஷ் குமார் என்பவர் படுகாயம் அடைந்தார் இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரித்து மாதவன் மணி உள்ளிட்டோரை கைது செய்தனர் தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
அதேபோல கோவை மாவட்டம் கிழக்கு அரசு ஊரில் இருக்கின்ற மதுரை வீரன் கோவில் வீதியைச் சார்ந்தவர் ரங்கசாமி (40) கூலி தொழிலாளியான இவர் ஒரு துக்க நிகழ்வின் பங்கேற்று விட்டு நேற்று அதிகாலை மதுரை வீரன் கோவில் வீதி வழியாக தன்னுடைய வீட்டிற்கு போய் கொண்டு இருந்தார்.
அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (45) தாமரை என்ற தம்பதிகளின் வீட்டின் வழியாக சென்ற பங்கு இருந்த தட்டியை ரங்கசாமி தட்டிவிட்டு போனதாக கூறப்படுகிறது இதனை கண்ட தம்பதிகள் இருவரும் ரங்கசாமியிடம் வாக்குவாதம் செய்ததுடன் அவரை கட்டையால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் கோவிந்தராஜ், தாமரை தம்பதியினரை கைது செய்தனர்.