fbpx

பைக் மோதியதில் ஏற்பட்ட தகராறு.! கொடூர தாக்குதலில் ஒருவர் பலி.! பலத்த காயத்துடன் அனுமதி.!

ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் பைக் மோதிய தகராறில், இரண்டு இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். அதில் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார் மற்றொருவர் பலத்த காயங்களுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின், ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள சங்கரியா பகுதியில் இருக்கும் ஜண்ட்வாலா சிகான் கிராமத்தில் பைக் மோதிய விவகாரத்தில், சந்தீப் சிங் மற்றும் சோமா சிங் என்ற நண்பர்கள் ஐந்து பேரால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட சந்தீப் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். சோமா சிங் தற்போது மாவட்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முதலில், அவரை சங்கரியா காவல் நிலையத்திற்கும், பின்னர் அவசர மருத்துவ சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர். இறந்த சந்தீப் சிங்கின் சகோதரர், குல்தீப் சிங் நேற்று மாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில், சங்காரியா காவல் நிலையத்தின் வட்ட ஆய்வாளர் ராம்சந்திர கஸ்வான், இந்த கொலை சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்த சர்பஞ்ச் ஜஸ்கரன் சிங் மற்றும் அவரது கூட்டாளி ஹிம்மத் சிங் ஆகியோரை கைது செய்தார். மேலும் விசாரணையில் இந்த சம்பவத்தில் ஐந்து பேர் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து கூடுதலாக விசாரணையை மேற்கொள்ள போவதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Post

"குழந்தை பெத்தெடுத்தா 8 லட்ச ரூபாய் போனஸ்.." அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்.! எங்கு தெரியுமா.?

Sat Feb 10 , 2024
சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வித்தியாசமான போனஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி ஆச்சரியமடைய செய்கிறது. அந்த வகையில் தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அறிவித்திருக்கும் போனஸ் அனைவரையும் ஆச்சரியமடைய செய்திருப்பதோடு வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. தென் கொரிய நாட்டில் இயங்கி வரும் ‘பூ யூங்’ என்ற கட்டுமான நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் குழந்தை பெற்றுக் கொண்டால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8,383,936.36 வழங்குவதாக அறிவித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி […]

You May Like