fbpx

13 ஆண்டுகளாக சிறுமியை மாறி, மாறி பலாத்காரம் செய்து வந்த உறவினர்கள்…..! இறுதியாக என்ன நடந்தது தெரியுமா….?

22 வயது பெண் ஒருவரை கடந்த 13 ஆண்டுகளாக மாறி மாறி, மாறி செய்து வந்த இரு உறவினர்களை காவல் துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலை பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம் பெண். அதே பகுதியைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெரியப்பாவான தங்கராஜ்(50) பெரியம்மா மல்லிகா உள்ளிட்டோர் வசித்து வந்தனர். சென்ற 13 வருடங்களுக்கு முன்னர், அந்த பெண் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்த சமயத்தில், மல்லிகாவிற்கு உடல்நிலை சரியில்லாத சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது தங்கராஜ் வீட்டிற்கு சென்று அந்த பெண் மல்லிகாவிற்கு உதவி செய்திருக்கிறார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தங்கராஜ், அந்த பெண் சிறுமியாக இருந்தபோது, பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.

இதனை எப்படியோ தெரிந்து கொண்ட அந்த பெண்ணின் உறவினரான, பிரகாஷ்(32) என்பவரும், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இப்படி 13 வருடங்களாக அந்த பெண்ணை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில்தான், அந்தப் பெண்ணின் உடலில் உண்டான மாற்றங்களை தொடர்ந்து, பெற்றோர் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, தங்கராஜும், பிரகாஷும் அவரை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் குறித்து தெரிவித்திருக்கிறார்.

ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அந்த பெண் புகார் வழங்கியதன் பேரில், தங்கராஜ், பிரகாஷ் உள்ளிட்ட இருவரையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த பெண் சிறுமியாக இருந்த சமயத்தில் இருந்து, அவரை வன்கொடுமை செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர். ஆகவே இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Next Post

வெங்காயத்தில் இப்படி கருப்பாக இருந்தால் யூஸ் பண்ணாதீர்கள்!… இது ஓர் பூஞ்சையா...! நச்சுவை உண்டாக்குகிறது!

Mon Aug 14 , 2023
வெங்காயத்தை உரிக்கும்போது காணப்படும் கருப்பு ஓர் பூஞ்சை ஆகும். இது நச்சுவை உண்டாகுவதால், இதனை சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெங்காயம் இல்லாமல் எந்த சமையலும் செய்ய முடியாது. இருப்பினும், வெங்காயத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மனிதனின் செரிமான அமைப்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கும் ஆற்றல் வெங்காயத்திற்கு உள்ளது. நம் உடலில் ஏற்படும் சில ஒவ்வாமை பிரச்சனைகள் கண்களில் அரிப்பு, தொண்டை அரிப்பு மற்றும் ஜலதோஷம்போன்ற […]

You May Like