fbpx

2024 ஏப்ரல் மாதம் மத்திய அரசின் வருவாய் ரூ.2,13,334 கோடி….!

2024 ஏப்ரல் நிலவரப்படி மத்திய அரசின் வருவாய் ரூ.2,13,334 கோடியாக உள்ளது என வருமான வரி தெரிவித்துள்ளது.

2024 ஏப்ரல் நிலவரப்படி மத்திய அரசின் வருவாய் ரூ.2,13,334 கோடியாக இருந்தது. இதில் ரூ1,84,998 கோடி வரி வருவாயாகும். ரூ.27,295 கோடி வரியல்லாத வருவாயாகவும் ரூ.1,041 கோடி கடன் அல்லாத மூலதன வருவாயாகவும் இருந்தது. வருவாயிலிருந்து மாநில அரசுகளுக்கு பகிரப்படும் வகையில், ரூ.69,875 கோடி வழங்கப்பட்டது. இது முந்தைய ஆண்டைவிட ரூ.10,735 கோடி அதிகமாகும்.

மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.4,23,470 கோடியாக இருந்தது. இதில் ரூ.3,24,235 கோடி வருவாய் கணக்கிலும் ரூ.99,235 கோடி மூலதனக் கணக்கிலும் அடங்கும். மொத்த வருவாய் செலவினத்தில் ரூ.1,28,263 கோடி வட்டிக்காக செலுத்தப்பட்டத் தொகையாகும். ரூ.19,407 கோடி மானியங்களாக வழங்கப்பட்டது என மத்திய வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

குட்நியூஸ்!… சிலிண்டர் விலை குறைந்தது!… எவ்வளவு தெரியுமா?

Sat Jun 1 , 2024
Cylinder: வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.70.50 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சமையல் கேஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. வர்த்தக கேஸ் சிலிண்டரை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்படும். அந்தவகையில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை இன்று […]

You May Like