fbpx

4 வயது மகன் வெட்டிக்கொலை..!! அடுப்பில் வைத்து எரிக்க முயன்ற சைக்கோ தாய்..!! நேரில் பார்த்த கணவர் ஷாக்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்த “மனநிலை சரியில்லாத” பெண் ஒருவர் தனது 4 வயது மகனை வெட்டிக் கொலை செய்து விட்டு அடுப்பில் வைத்து எரிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதேஷ் தேவி என்பவரின் கணவர் கபில் குமார் வேலை முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் மகன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், குமாரின் அலறல் சத்தம் கேட்டு குடும்ப உறுப்பினர்கள் வந்ததும் தேவி, மண்வெட்டியுடன், அவர்களையும் குமாரையும் வீட்டை விட்டு விரட்டி அடித்தார். இந்த கொடூர சம்பவம் குறித்து குமார் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து குமார் அளித்த புகாரின் அடிப்படையில் தேவி மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் அந்த பெண்ணை, விசாரிக்க முயன்ற போதிலும், தேவி அமைதியாக இருந்தார். இதற்கிடையில், அவர் “மனநிலை சரியில்லாதவர்” என்று அவரது சகோதரர் காவல்துறைக்கு தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : BREAKING | குளியலறையில் சடலமாக கிடந்த நடிகர் பிரதீப் விஜயன்..!! தலையில் காயம்..!! மாரடைப்பா..? மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்..!!

English Summary

The incident of a deranged woman who tried to burn her 4-year-old son by cutting her in the oven and burning it has caused a shock.

Chella

Next Post

"அந்த நிலாவதான் கையில புடிச்சேன்" பாடல் நடிகையை ஞாபகம் இருக்கா..?

Thu Jun 13 , 2024
Musician Ilayaraja's song 'Andha Nilavathan Kaiyila Pudichen' is still popular today. Actress Ranjani became very famous in Tamil cinema in her first film with this one song

You May Like