ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு நூதன வழிகளை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.. அந்த வகையில் மும்பையில் கடந்த 3 நாட்களில் 40 வங்கி வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, KYC மற்றும் PAN விவரங்களைப் புதுப்பிக்கும்படி ஒரு லிங்க் அனுப்பப்பட்டது. அந்த லிங்கை கிளிக் செய்ததால், அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது.

அதாவது முதலில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு KYC மற்றும் PAN விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று ஒரு இணைப்பு அனுப்பப்பட்டது. அந்த லிங்கை கிளிக் செய்தால், அது அவர்களின் வங்கியின் போலி இணையதளத்திற்கு அழைத்துச் செல்லும்.. அந்த போலி இணையதளத்தில், டிக்கையாளர் ஐடி, கடவுச்சொல் மற்றும் பிற ரகசிய விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுகிறார்கள். இதை தொடர்ந்து, அந்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு அழைப்பு வருகிறது..
அதில், பேசும் தன்னை வங்கி ஊழியர் என்று கூறி , வாடிக்கையாளரின் மொபைல் போனுக்கு வந்த OTP பகிருமாறு கேட்கிறார். இதையடுத்து அவரது கணக்கில் இருந்து ரூ. 57,636 டெபிட் செய்யப்பட்டது. இதே போல் கடந்த 3 நாட்களில் மட்டும் மும்பையில் 40 வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் திருடப்பட்டுள்ளது..
எனவே வங்கி வாடிக்கையாளர்களின் ரகசிய விவரங்களைக் கேட்கும் அத்தகைய இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம் என்று, மும்பை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.