fbpx

இப்படி ஒரு திட்டமா…? பெண்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.4,000 உதவித்தொகை…! எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா…?

அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட தமிழக அரசு உத்தேசித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4,000/- கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிக் கணக்கு துவங்கி அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

மேற்படி ஆதார் எண் மற்றும் வங்கி விவரங்களை தமது வருமானச் சான்று மற்றும் சாதிச்சான்று நகல்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவியர்களது விபரங்களை EMIS (Educational Management Information System) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சிறுநீரில் இந்த மாற்றங்கள் தெரிகிறதா.? காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை பாருங்கள்.!?

Sat Jan 13 , 2024
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகளும், தவறான பழக்கவழக்கமும் உடலில் சத்து குறைபாடை ஏற்படுத்தி பல்வேறு நோய்கள் உருவாக்குகிறது. தற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோய் பலரையும் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சர்க்கரை நோய் பாதித்தால் முறையான மருத்துவ சிகிச்சையும், உணவு கட்டுப்பாடுகளும் பின்பற்றி வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும் போது உடலில் மற்ற உறுப்புகளை சேதப்படுத்தி […]

You May Like