fbpx

சிறுவன் உட்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு.! முன்பகையா இல்லை சாதி மோதலா.? தீவிர விசாரணையில் காவல்துறை.!

மதுரையில் சிறுவன் உட்பட 5 பேர் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வெட்டி விட்டு தப்பி சென்ற மர்ம கும்ப கும்பலை தேடி வருகிறது.

மதுரை மாவட்டம் பெருங்குடியில் திடீரென புகுந்த மர்ம கும்ப கும்பல் அப்பகுதியைச் சார்ந்த சிறுவன் உட்பட 5 பேரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றிருக்கிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திடீரென ஊருக்குள் புகுந்து மர்ம நபர்கள் தாக்கி இருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த தாக்குதல் சம்பவம் எதனால் ஏற்பட்டது என காவல்துறை பல கோணங்களில் விசாரித்து வருகிறது.

நடு இரவில் ஊருக்குள் புகுந்து மர்ம நபர்கள் தாக்கி இருப்பதால் முன்பகை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா.? அல்லது ஜாதி ரீதியிலான மோதலால் இந்த தாக்குதல் நடைபெற்றதா.? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான நபர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Post

இதை மட்டும் செய்து பாருங்க..!! உங்க பண கஷ்டம் தீர்ந்து போகும்..!!

Tue Nov 28 , 2023
இந்த பிரபஞ்சம் நம் எண்ணங்களை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கும். இதனால் தான் நம் முன்னோர்கள் எண்ணம் போல் வாழ்க்கை என சொல்லி வைத்திருக்கின்றனர். ஆம், நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே மாறிவிடுவோம் என்பது நிதர்சனம். பொதுவாக நமக்கு ஏதாவது விதத்தில் பணம் வருகிறது என்றால், மனம் தானாகவே மகிழ்ச்சியில் இருக்கும். ஆனால், பலரும் அந்த பணத்தை செலவு செய்யும் போது மகிழ்ச்சியாக இருப்பதில்லை. இதுவே நம் கையில் பணம் […]

You May Like