fbpx

அயோத்தி ராமர் கோவில்: “500 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது” – உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்.!

2024 ஆம் வருடத்திற்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர், பாராளுமன்றத்தில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மேலும் பொது தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி பாராளுமன்ற கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாராளுமன்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வின்போது பேசிய அவர் குடியுரிமை திருத்த மசோதா பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றது பற்றி தனது கருத்தை பகிர்ந்து கொண்ட அவர் இது தொடர்பான விவாதங்கள் மற்றும் கருத்துக் கணிப்புகள் நாடெங்கிலும் நடைபெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த உரையில் ராமர் கோவில் நிகழ்வு பற்றி பேசிய அமித் ஷா, 500 வருடங்களாக மக்கள் எதிர்பார்த்த ஒரு நிகழ்வு இந்த வருடம் நிறைவேறி இருக்கிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நீண்ட காலம் நடைபெற்று வந்த யுத்தம் முடிவுக்கு வந்ததாக தெரிவித்த அவர், இந்த யுத்தம் நீதிமன்றங்களின் மூலமும் சட்டங்களின் மூலமும் நடத்தப்பட்ட ஒன்று எனக் கூறியிருக்கிறார்.

அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளில் ஒன்று என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்து வெற்றி பெறச் செய்வார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த வலுவான கூட்டணி வர இருக்கின்ற ஆண்டுகளிலும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான பல திட்டங்களை செயல்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Post

திருச்சி: குடிபோதையில் பெண் மீது கொடூரத் தாக்குதல்.! 2 நபர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை.!

Sat Feb 10 , 2024
திருச்சியில் பொது கழிப்பிடத்தை பராமரிப்பு செய்து வரும் பெண் ஒருவர், குடிபோதையில் இருந்த 2 நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சி, உறையூரில் உள்ள குழுமணி பகுதியில் அமைந்த டாக்கர் ரோடு பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகள் […]

You May Like