மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனமான BIS நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புதிய வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, இந்த நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற consultant பணிக்கு, 12 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு, மாதம் 50,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசு அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில், engineering degree, MBA degree in master, communication, master in social work போன்றவற்றில் தேர்ச்சி அடைந்தவர் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் வயது தளர்வு தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்த்து, தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பம் செய்யும் நபர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதி மற்றும் ஆர்வமாக இருக்கும் நபர்கள், இதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதன் பிறகு பூர்த்தி செய்து இணையதளம் மூலமாக வரும் 14.9.2023 அன்று மாலைக்குள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification PDF