fbpx

குட் நியூஸ்..! ஜூலை 1 முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 53% ஆக உயர்வு..‌!

மத்திய அரசு பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி சமீபத்தில் 53 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் ஸ்டாலின், இதை கனிவுடன் பரிசீலித்து, மாநில அரசு பணியாளர்களுக்கும் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நாட்டுக்கே வழிகாட்டும் வகையில், மக்கள் நலன் கருதி பல முன்னோடி நலத் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இப்பணியில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, மத்திய அரசு பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி சமீபத்தில் 53 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் ஸ்டாலின், இதை கனிவுடன் பரிசீலித்து, மாநில அரசு பணியாளர்களுக்கும் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதனால், 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி ஜூலை 1 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களின் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

53% increase in gratuity for government employees from July 1

Vignesh

Next Post

16 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்...!

Sat Oct 19 , 2024
Yellow alert for 16 districts today

You May Like