தெலுங்கானா மாநிலத்தில் 70 வயது மூதாட்டி ஒருவரை 20 குரங்குகள் சேர்ந்து தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுடைய அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தின் ராமா ரெட்டி கிராமத்தைச் சார்ந்தவர் சத்ரபைனா நர்சவ்வா. 70 வயதான இவர் தனது கிராமத்தில் மகளுடன் வசித்து வந்திருக்கிறார். கடந்த மார்ச் மூன்றாம் தேதி இவர் தனது சமையலறையில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த போது இவரது வீட்டிற்குள் நுழைந்த 20 குரங்குகள் அந்தப் பெண்மணியை பலமாக தாக்கி இருக்கின்றன. இந்த தாக்குதலில் அவரது முதுகு நெஞ்சு மற்றும் மூட்டு பகுதிகளில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்ற நேரத்தில்
சத்ரபைனா நர்சவ்வா வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். 20 குரங்குகள் படையெடுத்து வருவதை கண்டதும் அக்கம்பக்கத்தினரும் குரங்குகள் செல்லும் வரை தங்களது வீடுகளை மூடி இருக்கின்றனர். அதன் காரணமாக இந்த மூதாட்டியை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.