fbpx

கொடூரத்தின் உச்சம்!! 9 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த 69 வயது முதியவர்…

சமீப காலமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இளம்பெண்கள், மூதாட்டிகள், குழந்தைகள் என அனைத்து வயதினரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகள் மட்டும் அல்ல, பள்ளிக்கு செல்லும் ஆண் பிள்ளைகளுக்கும் பாலியல் தொல்லை நடக்கும் செய்திகளை நாம் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம். இதனால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளி, மற்றும் கல்லூரிக்கு அனுப்புவதற்கு கூட அஞ்சுகின்றனர். அந்த வகையில், 9 வயது சிறுமி ஒருவருக்கு நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அம்பாறை மாவட்டம், வீரமுனை பகுதியை சேர்ந்தவர் 69 வயதான முதியவர். லாட்டரி சீட்டு விற்பனை செய்து வரும் இவர் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகிறார். இவர் ஒன்பது வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். தனது மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், இந்த சம்பவம் குறித்து சம்மாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், 69 வயது முதியவரை கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read more: ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற விஜயபாஸ்கரின் கொம்பன் காளை..!! பரிசு வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

English Summary

9 years old girl was sexually abused

Next Post

கணவனின் நண்பருக்கு நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பிய பெண்; இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Wed Jan 15 , 2025
woman sent her nude photos to her husbands friend

You May Like