அசாம் மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
சீனாவில் எச்எம்பிவி வைரஸ் தொற்று பரவி வருகிறுது. இந்த வைரஸ் இப்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை 14 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்தக் குழந்தையை திப்ருகார் நகரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
முக்கிய அறிகுறிகள் :
எச்எம்பிவி வைரஸின் ஆரம்பகால அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் சளி ஆகும். மேலும் தொடர்ந்து இருமல், தும்மல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் இருந்து கொண்டே இருக்கும். கோவிட் போலவே ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டுள்ளது. எச்எம்பிவி வைரஸால் இளம் குழந்தைகள், வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எச்எம்பிவி வைரஸ் தொற்று ஏற்பட்டால் ஒரு சிலருக்கு உடனே கடுமையான நோய் பாதிப்பு ஏற்படலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தும்.
வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த நம்ம சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். இருமல் அல்லது தும்மல் இருந்தால் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். தொடர் இருமல் இருந்தால் பொதுவெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை மாஸ்க் பயன்படுத்துவது நல்லது. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கையை சோப்பு அல்லது சானிடைசர் போட்டு கழுவ வேண்டும்.