fbpx

15 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த 21 வயது இளைஞர், ஒரு தலை காதலால் ஏற்பட்ட விபரீதமா….? காவல்துறையினர் அதிரடி விசாரணை….!

நாள்தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதனை தடுப்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் கை கொடுக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டாலும், அந்த நடவடிக்கைக்கு இது போன்ற குற்றங்களை தடுப்பதற்கான சக்தி இல்லை என்றே கருதப்படுகிறது.

அந்த வகையில் தான் தற்போது திருவண்ணாமலையில் 15 வயது பள்ளி மாணவியை, 21 வயது இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, கேள்வியுற்ற காவல்துறையினர், அந்த இளைஞரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை அருகே உள்ள வந்தவாசி பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் யோகேஸ்வரன் என்ற இளைஞர், அந்த சிறுமியை அவர் அணிந்திருந்த துப்பட்டாவை பிடுங்கி, கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  இதற்கு நடுவே அந்த சிறுமியை கொலை செய்துவிட்டு, அருகில் உள்ள முற்புதருக்கு இழுத்துச் சென்று அந்த இளைஞர் போட்டு விட்டு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.

 மேலும், அனேகமாக இது காதல் விவகாரமாக தான் இருக்க வேண்டும், யோகேஸ்வரன் அந்த சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்திருக்கலாம் என்றும், ஆனால், அந்த இளைஞரின் காதலுக்கு அந்த சிறுமி சம்மதிக்காமல் இருந்திருக்கலாம், அதன் காரணமாக, ஏற்பட்ட கோபத்தால், அந்த சிறுமியை அந்த இளைஞர் கொலை செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. காவல்துறையினரின் முழுமையான விசாரணை முடிவடைந்த பின்னரே இது பற்றிய உண்மையான தகவல் என்ன? என்பதை பற்றி தெரிய வரும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி, சென்னாவரம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற இளைஞர், சிறுமியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

கொலையை அரங்கேற்றிய கொடூரன், சிறுமியின் உடலை முட்புதர் பகுதியில் வீசி இருக்கிறான். சிறுமியின் கொலை குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், விசாரணை நடத்தி யோகேஸ்வரனை (வயது 21) கைது செய்தனர். 

அவனிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேற்படி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Next Post

வாட்ஸ் அப்பில் 3 முக்கிய அம்சங்கள் அறிமுகம்..!! இது உங்களுக்கு வொர்க் ஆகுதா..?

Mon Sep 25 , 2023
வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது, வாட்ஸ்அப் பிசினஸுக்கான பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களை, மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். இதில் 3 முக்கிய அம்சங்கள் […]

You May Like