ஆடுஜீவிதம் படத்தில் வெகுநாட்களாக பாலைவனத்தில் சிக்கி தண்ணீர் உணவின்றி, பாதி உயிருடன் அங்கிருந்து தப்பித்தாரோ? அதேபோல்தான், இங்கும் நடந்திருக்கிறது. ஆனால், உயிர்பிழைக்கவில்லை. சவுதி அரேபியாவின் பாலைவனத்தில் நான்கு நாட்களாக வழி தெரியாமல் சுற்றித் தவித்த தெலுங்கானாவைச் சேர்ந்த 27 வயது இளைஞரும், அவருடன் சென்ற நபரும் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள தொலைதொடர்பு சேவை நிறுவனத்தில், தெலுங்கானாவின் கரீம் நகரைச் சேர்ந்த முகமது சேஷாத் கான், 27, பணியாற்றி வந்தார். இவர், தன்னுடன் பணிபுரியும் சூடான் நாட்டைச் சேர்ந்த நண்பருடன், உலகின் மிகவும் ஆபத்தான பாலைவனங்களில் ஒன்றான ரப் அலி காலி பாலைவனத்துக்கு சமீபத்தில் ஜீப்பில் சென்றார். இது சுமார் 650 கிலோமீட்டருக்கு பரந்து விரிந்து கிடக்கும் பிரம்மாண்ட பாலைவனமாகும். இவர்கள் சென்றுக்கொண்டிருக்கும்போது ஜிபிஎஸ் சிக்னல் கட்டாகி உள்ளது.
மொபைலிலும் சார்ஜ் இல்லாமல் அது ஸ்விட்ச் ஆஃப் ஆனது. இதனால், யாரையும் அழைக்க முடியாமல் அவர்கள் கதிகலங்கி நின்றனர். எப்படியாவது பாலைவனத்தைத் தாண்டிவிடலாம் என்று நினைத்த அவர்கள் தொடர்ந்து வண்டியை ஓட்டியுள்ளனர். அப்போது வண்டியில் எரிபொருளும் தீர்ந்துள்ளது. இதனால், அவர்களால் எங்கேயும் போக முடியாமலும், யாரையும் அழைக்க முடியாமலும் தடுமாறினர்.
பாலைவனத்தில் வெயில் தாக்கம் அதிகளவு இருந்தது. கடுமையான நீரிழப்பு மற்றும் சோர்வு காரணமாக இருவரும் பாலைவனத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடன் பணியாற்றிய நண்பர்கள் இவர்களை காணாததால், போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் தேடும் பணியில் ஈடுபட்ட நான்காவது நாள் அவர்களது உடல்கள் கிடைத்துள்ளன. அவர்களின் வண்டிக்கு அருகேயே அவர்களுடைய உடல்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Read more ; சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ்..!! வெறும் ரூ.340 மட்டும்.. எப்படி பெறுவது?