fbpx

20 வயது இளம்பெண்ணுடன் குடும்பம் நடத்திய 50 வயது தந்தை..!! வீடு புகுந்து வெட்டிக்கொன்ற மகன்..!! பரபரப்பு தீர்ப்பு..!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலையத்தில் சிறப்பு காவலராக பணிபுரிந்து வருபவர் வேல்முருகன் (50). இவர் கடந்த 2011ஆம் ஆண்டு உத்திரமேரூரில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். அப்போது, வேடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலபதியின் மகள் ரம்யா (20) என்பவருக்கும், வேல்முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வேல்முருகன் மாறுதலாகி ஒரகடம் காவல் நிலையத்திற்கு சென்றார். அதன்பின்பும், இவர்களுக்கிடையேயான தொடர்பு நீடித்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு, வேல்முருகன் காஞ்சிபுரம் நாகலூத்து தெருவில் உள்ள, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ரம்யாவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், ரம்யா கர்ப்பமானார். இத்தகவல் வேல்முருகனின் குடும்பத்திற்கு தெரிந்ததும் அவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். 50 வயதில் தந்தை, வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் குழந்தையை பெற்று எடுத்தால், குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்படும் என நினைத்த, வேல்முருகனின் மகன் ரஞ்சித்குமார், ரம்யாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

அதன்படி, ரம்யா வசித்து வந்த வீட்டிற்கு ரஞ்சித்குமார் சென்றுள்ளார். பின்னர், உன் வயிற்றில் வளரும் கருவை கலைத்து விட்டு, சொந்த ஊருக்கு சென்று விடு என ரம்யாவிடம் கூறியிருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்த ரம்யா, வேல்முருகனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க முயன்றார். இதனால், ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ரம்யாவை சரமாரியாக வெட்டினார். இதில், படுகாயம் அடைந்த ரம்யா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனையடுத்து, சிவகாஞ்சி போலீசார் ரஞ்சித்குமார் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பான வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, ரஞ்சித்குமார் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டது. எனவே, குற்றவாளி ரஞ்சித்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், அபராதத்தை கட்ட தவறினால், கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Chella

Next Post

முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநர் என்று டெல்லியில் ஒன்று கூடும் தலைவர்கள்…..! அடுத்து நடக்கவிருப்பது என்ன….?

Thu Apr 27 , 2023
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கருணாநிதி நினைவாக அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கூட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சென்னை கிண்டியில் அமைய உள்ள பன்நோக்கு அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்த திட்டங்களுக்கான சிறப்பு விழாவை நடத்துவதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை முறைப்படி அழைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். அதோடு குடியரசு தலைவர் உடனான இந்த […]

You May Like