fbpx

“அதுல ஒன்னும் இல்ல கீழே போட்டுருங்க..” இடைக்கால பட்ஜெட் குறித்து இந்தியா கூட்டணி தலைவர் கடும் தாக்குதல்.!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 2024 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடப்பு ஆண்டின் பட்ஜெட், இடைக்கால பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பட்ஜெட்டில் சலுகைகள் இருக்கும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்திருக்கிறது என பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 11:00 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதன் பிறகு பட்ஜெட் குறித்து உரை நிகழ்த்தினார். அவரது உரையை பெரும்பாலும் தங்களது கட்சியின் பெருமையை கூறுவது போலவே அமைந்திருந்ததாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சோலார் பேனல் அமைப்பு அவர்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி மக்களுக்கு வீடுகள் போன்ற அறிவிப்புகள் வெளியானாலும் நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

வருமான வரியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவரும், இந்தியா கூட்டணியின் தலைவர்களில் ஒருவருமான அகிலேஷ் யாதவ். இது தொடர்பாக பேசி இருக்கும் இவர் “வளர்ச்சி திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத பட்ஜெட் எதற்கும் உபயோகமில்லாதது”, என தெரிவித்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியை கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு விரோதமான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். இது போன்ற ஒரு மோசமான சாதனையை யாரும் முறியடிக்க முடியாது என கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

Next Post

"மேடம் நோட் பண்ணிக்கோங்க.. '15 AIIMS'-களும் ஒரு செங்கல்லும்" நிதியமைச்சரின் உரைக்கு AIIMS தமிழக எம்.பி பதிலடி.!

Thu Feb 1 , 2024
2024 ஆம் வருடத்திற்கான மத்திய அரசின் பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து உரை நிகழ்த்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 10 ஆண்டுகளில் கல்வி மற்றும் மருத்துவத்துறையில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். மத்திய அமைச்சரின் பட்ஜெட் உரைக்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை ‘X’ வலைதளத்தில் பதிவு செய்து இருக்கிறார். பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் 2024 […]

You May Like