2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுகவின் கட்டமைப்பை வலுப்படுத்த முதல்வர் முக.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக ’தி ஹிந்து’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் 16ஆம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி 18-வது மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்ததும், அமைச்சரவையை மாற்றியமைக்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில், தற்போது தேர்தலில் கடமைக்கு பணியாற்றியவர்கள், சரிவர செயல்படாத அமைச்சர்கள் பட்டியலை தயாரித்துள்ளதாகவும், அவர்களின் இலாகாவை மாற்ற முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியப் பதிவு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
Read More : ஜூன் 6இல் பள்ளிகள் திறப்பு..!! உடனே இதை பண்ணுங்க..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு..!!